கருப்பு நிலக்கரி

கருப்பு நிலக்கரி அல்லது அந்த்ராசைட் (Anthracite, கிரேக்கம் aνθρακίτης (anthrakítes), "நிலக்கரி-போன்ற," άνθραξ லிருந்து (அந்த்ராக்ஸ்), நிலக்கரி)[1] ஒரு மிளிர்கின்ற, வலிதான, குறுக்கிய நிலக்கரிக் கனிம வகையாகும். இது கற்கரி, காகக் கரி, கில்கென்னி நிலக்கரி, கருப்பு வைரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. நிலக்கரி வகைகளிலேயே மிகவும் கூடுதலான கரிமத்தைக் கொண்டுள்ளதும் மிகக் குறைந்தளவே மாசுக்களைக் கொண்டிருப்பதும் மிக உயர்ந்த கலோரி எண்ணிக்கை கொண்டுள்ளதும் இதன் சிறப்பியல்புகளாகும்.

கருப்பு நிலக்கரி

கரிமம் 92.198%

நிலக்கரி வகைகளிலேயே மிகவும் உருமாற்றத்தை அடைந்துள்ள இதில் கரிமத்தின் உள்ளடக்கம் 92.1% முதல் 98% வரை உள்ளது.[2][3] இதனை பற்ற வைப்பது கடினமாக இருப்பினும் நீலநிறத்தில், புகையில்லாது சிறிய தீச்சுடருடன் எரிகிறது.

மேற்கோள்கள்

  1. "anthracite," The Oxford English Dictionary. 2nd ed. 1989. OED Online. Oxford University Press. Retrieved 2010-06-26.
  2. "MIN 454: Underground Mining Methods handout; from course at the University of Alaska Fairbanks". பார்த்த நாள் 2009-05-05.
  3. R. Stefanenko (1983). Coal Mining Technology: Theory and Practice. Society for Mining Metallurgy. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89520-404-5.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.