அனுராகம்
அனுராகம் (
அனுராகம் | |
---|---|
இயக்கம் | யசபாலித்த நாணயக்கார |
தயாரிப்பு | யசபாலித்த நாணயக்கார |
திரைக்கதை | பி. எஸ். நாகலிங்கம் |
இசை | சரத் தசநாயக்க |
நடிப்பு | என். சிவராம் சந்திரகலா அனோஜா எஸ். என். தனரட்னம் எஸ். விஸ்வநாதராஜா டொன் பொஸ்கோ செல்வம் பெர்னாண்டோ |
ஒளிப்பதிவு | ஜே. ஜே. யோகராஜா |
படத்தொகுப்பு | துரை. பவானந்தன் |
வெளியீடு | 1978 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
என். சிவராம், எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, எஸ். என். தனரட்னம் முதலியோர் நடித்த இத்திரைப்படத்தின் கதை, வசனத்தை எழுதியதோடு உதவி இயக்குனராகவும் பி. எஸ். நாகலிங்கம் பணியாற்றினார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களை ஈழத்து ரத்தினம் எழுத, அவற்றை முத்தழகு, கலாவதி இருவரும் பாடினார்கள். சரத் தசநாயக்க இசையமைத்தார்.
குறிப்பு
- இதே கதையை சமகாலத்தில் "கீதிகா" என்ற பெயரில் சிங்களப் படமாக தயாரித்தார்கள். தமிழ்ப் படத்தில் சிவராம் - சந்திரகலா நடித்த பிரதான பாத்திரங்களில் சிங்களப் படத்தில் விஜய குமாரணதுங்கவும், மாலினி பொன்சேகாவும் நடித்தார்கள்.
- இயக்குனர் யசபாலித்த நாணயக்கார, இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
- ஈழத்து ரத்தினம் இயற்றிய பாடல் - முத்தழகு பாடியது - "எண்ணங்களாலே இறைவன் தானே, பொன் வண்ணத்தாலே வரைந்துவிட்டானே" என்று ஆரம்பிக்கும் பாடல் பலரைக் கவர்ந்தது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.