அதுர்ஸ்

அதுர்ஸ் (தெலுங்கு: అదుర్స్; நடுக்கம்) என்பது 2010-ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் என். டி. ஆர். ஜூனியர், நயன்தாரா மற்றும் சீலா நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை வி. வி. விநாயக் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஜுட்வா நம்பர் - 1" என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.[1]

அதுர்ஸ்
இயக்கம்வி. வி. விநாயக்
தயாரிப்புவம்சி மோகன்
கதைகோனா வெங்கட்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புஎன். டி. ஆர். ஜூனியர்
நயன்தாரா
சீலா
ஒளிப்பதிவுசோட்டா கே. நாயுடு
படத்தொகுப்புகவுதம் ராஜு
வெளியீடுசனவரி 13, 2010 (2010-01-13)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு33 கோடி
(US$4.65 மில்லியன்)
.
மொத்த வருவாய்56 கோடி
(US$7.9 மில்லியன்)
.

கதைச் சுருக்கம்

இரட்டப்பிறவிகளான நரசிம்மாவும், நரசிம்மாசாரியும் (ஜூனியர் என்டிஆர்) பிறப்பின் போதே பிரிக்கப்படுகின்றனர். நரசிம்மா அவருடைய தாயாரால் வளர்க்கப்பட்டு ஒரு காவல் அதிகாரியின் கீழ் பணி செய்கிறார். சாரி ஒரு அய்யங்கார் குடும்பத்தால், மிகவும் ஆச்சாரமாக வளர்க்கப்படுக்றார். இந்நிலையில் ஆசிஷ் வித்யார்த்தியும், மஹேஷ் மஞ்ச்ரேக்கரும் இரானுவ விஞ்ஞானியின் (ஜூனியர் என்டிஆரின் தந்தை) குடும்பத்தைத் தேடுகிறார். அதன் பிறகு நடக்கும் விடயங்களை அழகாக சொல்லியிருக்கிறார் விநாயக்.

நடிப்பு

  • ஜூனியர் என்டிஆர் - நரசிம்மாவாகவும் / நரசிம்மாச்சாரிவாகவும்
  • நயன்தாரா - சந்தரகலாவாக (சந்து)
  • சீலா - நந்துவாக
  • பிரமானந்தம் - பட்டாச்சார்யாவாக (பட்டு)
  • சாயாஜி சின்டே
  • ஆசிஷ் வித்யார்த்தி

வெளியீடு

இத்திரைப்படம் ஏப்ரல், 23 2008-ம் ஆண்டு வெளியானது.[2] இத்திரைப்படம் "ஜுட்வா நம்பர். 1" என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது.

பாடல்

Untitled

டிசம்பர் 3, 2009 இத்திரைப்பட பாடல் வெளியானது.

எண் தலைப்புபாடியவர்(கள்) நீளம்
1. "சம்போ சிவ சம்போ"  தேவி ஸ்ரீ பிரசாத் 4:40
2. "சந்த்ரகலா"  Hariharan 4:13
3. "பில்லா நா காடு"  Mika Singh & Suchitra 4:47
4. "சாரி"  ஜுனியர் என் டி ஆர் & ரீட்டா 4:56
5. "நீதோனே"  குணால் கஞ்ச்வாலா & ஷ்ரேயா கோசல் 3:51
6. "அஸ்லாம் வலேகும்"  Baba Sehgal & Priya Himesh 5:08
7. "சிவ சம்போ" (The DSP Mix)  4:04

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

  • Full film Telugu dialogue with optional English subtitles, YouTube hosted, courtesy of MAA TV.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.