அட்டிலா

அட்டிலா என அழைக்கப்படும் அற்றிலா த ஹன் (Attila the Hun, 406-453) எனப்படும் அற்றிலா ஹண் பேரரசர்களுள் கடைசியானவனும் மிகவும் பலம் வாய்ந்தவனும் ஆவான். 434 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை அக்காலத்து ஐரோப்பாவின் மிகப் பெரிய பேரரசை ஆண்டவன் இவனாவான். அவனது பேரரசு மத்திய ஐரோப்பாவிலிருந்து கருங்கடல் வரையிலும் டன்யூப் நதியிலிருந்து பால்டிக் வரையிலும் பரந்திருந்தது. இவனது போர்த்தந்திரங்கள் மிகவும் விசித்திரமானவை.எதிரிகளை பல திசைகளில் இருந்து தாக்கும் இவனது சூழ்ச்சி கிழக்கு மற்றும் மேற்கு ரோமபெரரசுகளை கதிகலங்க வைத்துள்ளதாக சான்றுகள் குறிப்பிடுகின்றன.இவன் danube நதியை இரு தடவை கடந்து பால்கன் தேசங்களை சூறையாடினான். ஆனாலும் இவனால் கான்ஸ்டாண்டிநோபெல் நகரை கைப்பற்ற முடியவில்லை.இவன் ரோமதேசத்தின் பிடியில் இருந்த பிரான்ஸ் நாட்டையும் கைப்பற்ற முனைந்தான்,அனால் எனும் போரில் அவன் தோல்வியுற்றான்.இதன்பிறகும், அட்டிலா இத்தாலி மீது போர் தொடுத்தான். அவனால் இத்தாலியின் வடக்கை கைப்பற்ற முடிந்தது, அனால் ரோம் நகரை கைப்பற்ற முடியாமல் போனது. இவன் 453 ம் ஆண்டு இறந்தான்.

அட்டிலா
ஹண் பேரரசின் ஆட்சியாளன்
ஆட்சி434–453
முன்னிருந்தவர்பிளெடா, ருகிலா
பின்வந்தவர்எல்லாக்
தந்தைமுந்த்சுக்
பிறப்புதெரியவில்லை
இறப்புகிபி 453

வரலாறு மற்றும் ஆதாரங்கள்

அட்டிலாவின் வரலாற்றை நிறுவுவது என்பது சவால் நிறைந்ததாக இருந்தது. ஏனெனில் அட்டிலாவை பற்றிய முழுமையான வரலாற்று ஆதாரங்கள் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் அட்டிலாவின் எதிரிகளால் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. அட்டிலாவின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் பல்வேறு சான்றுகளை அட்டிலாவின் வாழ்க்கையைப்பற்றி விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அதில் சிறிதளவே எஞ்சியுள்ளது.[1]:25 பைசாந்தியப் பேரரசின் தூதுவர் மற்றும் வரலாற்றாளரான பிரிஸ்கஸ் கிரேக்க மொழியில் எழுதினார். அட்டிலாவின் கதையில் இவர் ஒரு சாட்சியாகவும் மற்றும் பங்கேற்பாளராகவும் இருந்துள்ளார். கி. பி. 449 இல் ஹூனர்களின் அவைக்கு இரண்டாம் தியோடோசியசால் அனுப்பப்பட்ட தூதுக்குழுவில் இவர் ஒரு உறுப்பினராக இருந்தார். இவர் தனது அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக வெளிப்படையாக ஒரு சார்பு உடையவராக இருந்தார். ஆனால் இவரது எழுத்துக்கள் அட்டிலாவின் வாழ்க்கையை பற்றிய செய்திகளை கூறும் முக்கியமான ஆதாரமாக உள்ளன. அட்டிலாவின் உருவ அமைப்பைப் பற்றி பதிவிட்ட ஒரே ஒரு அறியப்பட்ட நபர் இவர்தான். கி. பி. 430 முதல் 476 வரையிலான பிந்தைய ரோமப் பேரரசின் வரலாற்றை 8 புத்தகங்களாக இவர் எழுதினார்.[2]

தற்போது பிரிஸ்கஸின் வரலாற்றில் மிகச் சிறிதளவே நமக்கு கிடைக்கிறது. ஆனால் அதனை ஆறாம் நூற்றாண்டு வரலாற்றாளர்களான புரோகோபியஸ் மற்றும் ஜோர்டானேஸ் ஆகியோர் விரிவாக தங்களது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.[3]:413 குறிப்பாக ஜோர்டானேஸ் தனது கெட்டிகா (கோத்களின் தோற்றம் மற்றும் செயல்கள்) என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் பிரிஸ்கஸின் வரலாற்று நூலைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. ஹூன பேரரசு மற்றும் அதன் அண்டை நாடுகளை பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள மிக முக்கியமான ஆதாரமாகவும் இந்த நூல் விளங்குகிறது. அட்டிலாவின் இறப்பிற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அட்டிலாவின் மரபு மற்றும் ஹூன மக்களைப் பற்றி இவர் விளக்கியுள்ளார். பேரரசர் ஜஸ்டினியனின் ஆளுநரான அதே காலத்தில் வாழ்ந்த மார்செலினஸ் கோமேஸ் என்பவரும் ஹூனர்கள் மற்றும் கிழக்கு ரோமப் பேரரசுக்கும் இடையில் இருந்த தொடர்பை பற்றி விளக்கியுள்ளார்.[1]:30

பல்வேறு திருச்சபை நூல்களும் பயன்தரக்கூடிய ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கக்கூடிய செய்திகளை நமக்கு வழங்குகின்றன. 6 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை பலமுறை கையெழுத்துப் பிரதிகளாக இவை மாற்றம் அடைந்ததால் சில நேரங்களில் இவற்றை அங்கீகரிப்பது என்பது கடினமானதாகவும் செய்திகள் சிதறுண்டும் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டு ஹங்கேரிய எழுத்தாளர்கள் ஹூனர்களை ஒரு நேர்மறையான பார்வையில் தங்களது புகழ்பெற்ற முன்னோர்களாக காட்டுவதை விரும்பினர். எனவே சில வரலாற்று செய்திகளை நீக்கி தங்களது சொந்த புனைவுகளை இணைத்தனர்.[1]:32

ஹூனர்களின் இலக்கியம் மற்றும் வரலாறானது வாய்வழியாக இதிகாசங்கள் மற்றும் பாடல்களாக தலைமுறை தலைமுறையாக பாடப்பட்து.[3]:354 மறைமுகமாக இந்த வாய்வழி வரலாற்றின் சிதைந்த பகுதிகள் ஸ்காண்டினேவியர்கள் மற்றும் ஜெர்மானியர்களின் இலக்கியங்களின் மூலமாக நமக்கு கிடைக்கின்றன. இவர்கள் ஹூனர்களின் அண்டை நாட்டவர் ஆவர். இந்த இலக்கியங்கள் 9 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டன. பல்வேறு நாடுக்கால இதிகாசங்களில் உள்ள ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அட்டிலா இருந்துள்ளான். உதாரணமாக நிபேலுங்கென்லியேட் காவியத்தை பற்றி கூறலாம். இது போல மேலும் பல எட்டாக்கள் மற்றும் சகாக்களில் அவன் முக்கியமான கதாபாத்திரமாக இருந்துள்ளான்.[1]:32[3]:354

உசாத்துணைகள்

  • Given, John (2014). The Fragmentary History of Priscus: Attila, the Huns and the Roman Empire, AD 430-476. (Paperback). Christian Roman Empire series, volume 11. Merchantville, NJ: Evolution Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-935228-14-1. This is an English translation of the complete list of confirmed and possible fragments of Priscus's history in rough chronological order with explanatory text by the translator.
  • Priscus. Byzantine History. Bury, J. B. (English translation). Priscus at the court of Attila (online); Dindorf, Ludwig (1870) (the original Greek). Historici Graeci Minores. Leipzig: Teubner.
  • Jordanes. The Origin and Deeds of the Goths (online). Translated by Mierow, Charles C.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.