அடைப்பி

அடைப்பி (Gasket) அடைவலயம் என்பது இயந்திர பாக இணைப்புக்களில் அழுத்தத்தாலோ அல்லது தெறித்தலினாலோ கசிவுகள் ஏற்படாமல் தடுக்கப் பயன்படுகிறது. இணைப்பிறுக்கித் தகடு, இரப்பர் வலயங்கள் போன்றவை அடைப்பியாக செயற்படுகின்றன. அடைப்பிகள் பயன்படும் முறை மற்றும் இடத்தைப் பொறுத்து பலவகையாகப் பிரிக்கப்படுகிறது.

அடைப்பிகள்

உயரழுத்த நீராவி அமைப்புகள் போன்ற குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கான அடைவலயங்கள் கல்நாரால் செய்யப்படுவதுண்டு. என்றாலும், கல்நார்த் தொடுகை தரும் உடல்நலக்கேடுகள் காரணமாக, பெரும்பாலும் கல்நார் சாராத அடைவலயங்களே நடைமுறைப் பயன்பாட்டில் உள்ளன.[1]

சில குழாய் இணைப்புகள் பொன்மத்தாலேயே செய்யப்படுகின்றன. இவற்றில் அமர்வுப் பரப்பே அடைப்பு வேலையை நிறைவேற்றுகிறது. பொன்மத்தின் இயல்பான வில்லியல்பு அல்லது பான்மை ( σy,பொன்மத்தின் நெகிழ்வலிமை வரை) பயன்படுத்தப்படுகிறது. இவை அமுக்கவகை இணைப்புகள் (R-con and E-con compressive type joints) எனப்படுகின்றன.[2]

Polytetrafluoroethylene (PTFE) gasket

மேற்கோள்கள்

  1. "Gaskets and Gasketed Joints", John Bickford, Retrieved April 21, 2016
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.