அஞ்சல் வரலாறு
அஞ்சல் வரலாறு என்பது, அஞ்சல் முறைமைகள் செயற்படும் முறை குறித்து ஆய்வு செய்தலையும்; அவ் வரலாற்றை விளக்கும் கடித உறைகள், அஞ்சல் தொடர்பான பிற பொருட்கள் போன்றவற்றைச் சேகரிப்பதையும் குறிக்கும். அஞ்சல்தலை சேகரிப்பாளரும், அஞ்சல்தலை விற்பனையாளரும், அஞ்சல்தலை எலமிடுபவருமான ராப்சன் லோவே என்பவரே, 1930 ஆம் ஆண்டில் முதன்முதலாக இவ்விடயம் குறித்த ஒழுங்கான ஆய்வொன்றைச் செய்தவர் ஆவார். இவர் அஞ்சல்தலை சேகரிப்பாளரை "அறிவியல் மாணவர்கள்" என்றார். உண்மையில் அவர்கள் "கலைத்துறை மாணவர்கள்" ஆவர்.

சேகரித்தலின் சிறப்புத் துறை
அஞ்சல் வரலாறு என்பது, அஞ்சல்தலை சேகரித்தலின் ஒரு சிறப்புத் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. அஞ்சல்தலை சேகரிப்பு என்பது, அஞ்சல்தலை உற்பத்தி அவற்றை வழங்குதல் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட்ட அஞ்சல்தலை தொடர்பான ஆய்வாக உள்ளது. அஞ்சல் வரலாறு என்பதோ அஞ்சல்தலைகளையும், அதோடு தொடர்புடைய அஞ்சல்குறி, அஞ்சலட்டை, கடிதவுறை, அவை உள்ளடக்கியுள்ள கடிதங்கள் ஆகியவற்றை வரலாற்று ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்கின்றது. அஞ்சல் வரலாற்று ஆய்வில், அஞ்சல் கட்டணம், அஞ்சல் கொள்கை, அஞ்சல் நிர்வாகம், அஞ்சல் முறைமைகள் மீது அரசியலின் தாக்கம், அஞ்சல் கண்காணிப்பு என்பவற்றையும்; அரசியல், வணிகம்,பண்பாடு என்பவை தொடர்பில் அஞ்சல் முறைமைகளுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளையும் அஞ்சல் வரலாற்று ஆய்வில் சேர்த்துக்கொள்ள முடியும். பொதுவாக, அஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளல், இடத்துக்கிடம் எடுத்துச்செல்லல், வழங்குதல் ஆகியவை தொடர்பான எது குறித்தும் இத் துறையின் கீழ் ஆய்வு செய்யலாம்.
இவற்றையும் காணவும்
- அஞ்சல்தலை சேகரிப்பு
- அஞ்சல் வரலாறு
- அஞ்சல் குறியீடுகள்
- அஞ்சலட்டை
- அஞ்சல்குறி
- அஞ்சலக சுட்டு எண்
- மின்னஞ்சல்
- இந்திய அஞ்சல் துறை
- இந்திய தபால் சேவை
- இலங்கை அஞ்சல்தலைகள்
- இலங்கை அஞ்சல் துறை
- அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்
- விதவிதமான அஞ்சல் தலைகள்
- அஞ்சல் தலையில் அழகான பூக்கள்