அசுகாபாத்

அஸ்காபாத் (ஆங்கிலம்:Ashgabat, துருக்மெனிய: Aşgabat, பாரசீகம்: عشق آباد, உருசியம்: Ашхабад), துருக்மெனிஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பாரசீக மொழியில் அன்பின் நகரம் என பொருள்படுகின்றது. இந்நகரம் 1919 முதல் 1927 வரையான காலப்பகுதியில் பொல்டோரட்ஸ்க் (Poltoratsk) என அழைக்கப்பட்டது. 2001 மக்கட்தொகை மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 695,300 ஆகும். எனினும் 2009இல் இது ஏறத்தாழ 1 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. காரா கும் பாலைவனத்திற்கும் கொபெற் டாக் மலைத்தொடருக்குமிடையே அமைந்துள்ள இந்நகரம் ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாட்டிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவிலுள்ளது.

அஸ்காபாத்
Aşgabat, Ашхабад
பொல்டோரட்ஸ்க் (Poltoratsk) (1919-1927)

அஸ்காபாத் நகரம்
நாடு துருக்மெனிஸ்தான்
மாகாணம்அஹால் மாகாணம்
தோற்றம்1818
அரசு
  மேயர்ஆசாத் பிலிசோவ் (Azat Bilishov)
மக்கள்தொகை (2009)
  மொத்தம்9,09,000
தொலைபேசி குறியீடு12
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.