கப்போங்கு மொழி

கப்போங்கு (Kapóng) என்பது கயானா, மற்றும் வெனிசுவேலாவில் பேசப்படும் ஒரு கரிபன் மொழி ஆகும். இம்மொழி கயானாவில் குறிப்பாக அந்நாட்டின் மசருனி ஆற்றிற்கு மேலேயுள்ள பகுதிகளில் பரவலாகப் பேசப்படுகிறது. இம்மொழியைப் பேசுவோர் அனேகமாக கிராமங்களில் வசிக்காவிட்டாலும், கமராங், ஜவால்லா, வரமதோங், காக்கோ ஆகிய இடங்களில் உள்ளோர் பெரும்பான்மையாகப் பேசுகின்றனர். கப்போங்கு மொழியில் இரண்டு வட்டாரமொழி வழக்குகள் உள்ளன. அவை: அக்கவாயோ, பட்டமோனா ஆகியனவாகும்.

கப்போங்கு
Kapóng
நாடு(கள்)கயானா, வெனிசுவேலா
இனம்அக்கவாயோ, பட்டமோனா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (10,000 காட்டடப்பட்டது: 1990–2002)
கரிபன்
  • வெனிசுவேலா காரிப்
    • பெமோங்-பனாரே
      • பெமோங்
        • கப்போங்கு
          Kapóng
மொழிக் குறியீடுகள்
ISO 639-3Either:
ake  அக்கவாயோ
pbc  பட்டமோனா
மொழிக் குறிப்புkapo1251[1]

மேற்கோள்கள்

  1. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "கப்போங்கு". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/kapo1251.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.