அகோரிகள்

அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள். இவர்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை. இவர்களே இந்து சமயத்தின் கோர சாதுக்கள் ஆவர். இவர்கள் சிவனின் கோர ரூபமான பைரவரையும் வீரபத்திர்ரையும் வழிபடுவர். மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம். இவர்கள் இந்துசமய ஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை அகோரிகள் குறித்து சொல்கின்றன. காசி நகரத்தில் இவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.[1] கும்பமேளா விழாக்களின் போது நாடெங்கும் உள்ள அகோரிகள் கலந்து கொள்கிறார்கள். [2]

சைவ சமயப் பிரிவில் அகோரிகள்
அகோரி
கும்பமேளாவில் கலந்து கொள்ள வரும் அகோரிகள்

அகோரிகளைப் பற்றிய கதை தமிழில் நான் கடவுள் என்ற திரைப்படமாக வெளியானது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
  2. The Aghori Way of Life – Kumbh Mela and Moksha

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.