அகர் நதி
அகர் நதி ( Ahar River ) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் பாயும் பெராச் நதியின் துணை ஆறாகும். பெராச் நதி பனாசு நதியின் துணை ஆறாகவும், பனாசு நதி சம்பல் ஆற்றின் துணை ஆறாகவும், சம்பல் ஆறு யமுனை ஆற்றின் துணை ஆறாகவும், யமுனை நதி கங்கை ஆற்றின் துணை ஆறாகவும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
அகர் நதி | |
ஆறு | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலங்கள் | இராசத்தான், உத்திரப் பிரதேசம் |
நகரங்கள் | உதய்பூர், மேவார் |
உற்பத்தியாகும் இடம் | ஆரவல்லி மலைத்தொடர் |
கழிமுகம் | அகர்-பெராச் சங்கமம் |
பெரிய வடிகால் அமைப்பைக் கொண்ட அகர் நதி உதய்பூர் நகரத்தின் வழியாக ஓடுகிறது. உதய்பூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஏரியான பிகோலா ஏரியும், பதேக் சாகர் ஏரியும் அகர் ஆற்றில் கலக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நதி இப்போது உதய்பூர் நகரின் கழிவுநீர் மற்றும் கழிவுப்பொருட்களை கொண்டு செல்லும் கால்வாயாக ஓடுகிறது. அகர் ஆறு கி.மு.3000 கி.மு.1500 வரையான காலத்தைச் சேர்ந்த தொல்பொருள் தளமாகவும் அகர்-பனாசு நாகரிகத்தை வெளிப்படுத்தும் ஓர் அடையாளச் சின்னமாகவும் கருதப்படுகிறது [1][2].
மேற்கோள்கள்
- Hooja, Rima (July 2000). "The Ahar culture: A Brief Introduction". Serindian: Indian Archaeology and Heritage Online (1). Archived from the original on 18 August 2000. https://web.archive.org/web/20000818060316/http://www.serindian.com/sa-research/sa0aa21.htm.
- Cache of Seal Impressions Discovered in Western India Offers Surprising New Evidence For Cultural Complexity in Little-known Ahar-banas Culture, Circa 3000-1500 B.C. University of Pennsylvania Museum of Archaeology and Anthropology