அகமத் கத்ரடா

அகமத் கத்ரடா ( Ahmed Mohamed Kathrada 21 ஆகசுடு 1929–28 மார்ச்சு 2017) என்பவர் தென்னாப்பிரிக்க அரசியல்வாதியும் நிறவெறிக் கொள்கைக்கு எதிராகப் போராடிய செயல்பாட்டாளரும் ஆவார்.[1] தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா உடன் சிறை வாசம் புரிந்தவர். தென்னாப்பிரிக்க தேசியக் காங்கிரசு நடத்திய நிறவெறிக் கொள்கைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று 26 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அகமத் கத்ரடாவின் மூதாதையர் இந்தியாவின் சூரத்தைச் சேர்ந்தவர் ஆவார்கள்.[2]

அகமத் கத்ரடா
பிறப்பு21 ஆகத்து 1929
Schweizer-Reneke
இறப்பு28 மார்ச் 2017 (அகவை 87)
ஜோகானஸ்பேர்க்
படித்த இடங்கள்
  • தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி, செயற்பாட்டாளர்
இணையத்தளம்http://www.kathradafoundation.org/

1990 ஆம் ஆண்டில் சிறையிலிருந்து விடுதலை அடைந்தார். பின்னர் தென்னாப்பிரிக்க தேசியக் காங்கிரசு சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். தம் சிறை அனுபவ நினைவுகளை எழுதி ஒரு நூல் வெளியிட்டார்.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.