ஃபுல்டன் ஜான் ஷீன்
ஃபுல்டன் ஜான் ஷீன் (இயற்பெயர்: பீட்டர் ஜான் ஷீன், மே 8, 1895 – டிசம்பர் 9, 1979) என்பவர் அமெரிக்க நாட்டில் பிறந்த கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் ஆவார். இவர் தனது மறையுரைகளுக்காக, குறிப்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இவர் நிகழ்த்திய மறையுரைகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார். இவரின் புனிதர் பட்டமளிப்புக்கான பணிகள் முறைப்படி 2002இல் துவங்கின. புனிதர் பட்டமளிப்புக்கான பேராயம், இவரின் வாழ்க்கையை ஆராய்ந்தறிந்து இவர் வீரமான (மீநிலை) நற்பண்பு (Heroic Virtue) கொண்டுள்ளார் என பரிந்துரைத்ததன் அடிப்படையில், ஜூன் 2012இல், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார்.[2][3]
வணக்கத்திற்குரிய மேதகு. ஃபுல்டன் ஜான் ஷீன் | |
---|---|
ரோசெஸ்டர் ஆயர் | |
![]() ![]() | |
ஆட்சி பீடம் | ரோசெஸ்டர் |
நியமனம் | அக்டோபர் 21, 1966 |
ஆட்சி முடிவு | அக்டோபர் 6, 1969 |
முன்னிருந்தவர் | ஜேம்ஸ் எட்வர்டு கேர்னி |
பின்வந்தவர் | ஜோசப் லோய்டு ஹோகன் |
பிற பதவிகள் |
|
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | செப்டம்பர் 20, 1919 எட்மன்டு மைகேல் தோனே-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | ஜூன் 11, 1951 அதேதாதோ ஜியோவானி பியாசா-ஆல் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பீட்டர் ஜான் ஷீன் |
பிறப்பு | மே 8, 1895
[1] எல் பாசோ, இலினொய்[1] |
இறப்பு | 9 திசம்பர் 1979 84) நியூயார்க் நகரம் | (அகவை
கல்லறை | புனித பேட்ரிக் முதன்மைக்கோவில், நியூயார்க் நகரம் |
குடியுரிமை | அமெரிக்கர் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
குறிக்கோளுரை | Da per matrem me venire (தமிழ்: உம் அன்னை வழியாய் உம்மை வந்தடைய அருள்வீர்) |
புனிதர் பட்டமளிப்பு | |
பகுப்பு | வணக்கத்திற்குரியவர் |
1919இல் பியோரா மறைமாவட்ட குருவாக இவர் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1] இறையியலில் இவருக்கு இருந்த அறிவுக்காக கர்தினால் மெர்சியரின் பன்னாட்டு மெய்யியலுக்கான விருது (Cardinal Mercier Prize for International Philosophy) 1923இல் இவருக்கு அளிக்கப்பட்டது. 1951இல் இவர் நியூயார்கின் துணை ஆயராக நியமிக்கப்படும் முன் இவர் இறையியல் மற்றும் மெய்யியல் ஆசிரியராகவும், பங்கு குருவாகவும் பணியாற்றினார். அக்டோபர் 21, 1966 முதல் அக்டோபர் 6, 1969 வரை இவர் ரோசெஸ்டர் மறைமாவட்ட ஆயராக இருந்தார். 1969இல் இப்பதவியிலிருந்து இவர் விலகியபோது இவர் நியு போர்ட்டின் பட்டம் சார்ந்த ஆயராக நியமிக்கப்பட்டார். இவரின் குறிக்கோளுரை Da per matrem me venire (உம் அன்னை வழியாய் உம்மை வந்தடைய அருள்வீர்) என்பது ஆகும். இது வியாகுலத் தாய்மரி என்னும் தொடர்பாடலில் வரும் வரியாகும்.[1]
இருபது ஆண்டுகளாக இவர் The Catholic Hour (1930–1950) என்னும் பெயரில் இரவு நேர வானொலி நிகழ்ச்சியினை வழங்கினார். பின்னர் Life Is Worth Living (1951–1957) என்னும் நிகழ்ச்சியினை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார். இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இவர் இருமுறை எம்மி விருதினை வென்றுள்ளார். 2009 முதல் இவரின் இந்த நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சிகளில் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.[4] தொலைக்காட்சியின் மறைபரப்புவதில் ஷீனின் பங்களிப்பினால் இவர் இத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.[5][6]
மேற்கோள்கள்
- "Fulton Sheen Biography and Inspiration". Archbishop Fulton John Sheen Foundation. பார்த்த நாள் 2010-05-16.
- Otterman, Sharon (ஜூன் 29, 2012). "For a 1950s TV Evangelist, a Step Toward Sainthood". The New York Times. http://www.nytimes.com/2012/06/30/nyregion/archbishop-fulton-j-sheen-advances-toward-sainthood.html. பார்த்த நாள்: ஜூலை 5, 2012.
- "The Venerable Fulton J. Sheen: a model of virtue for our time". News.va. Pontifical Council for Social Communications (ஜூன் 30, 2012). பார்த்த நாள் ஜூலை 5, 2012.
- "The Archbishop Fulton J. Sheen Foundation". பார்த்த நாள் 2009-09-14.
- Rodgers, Ann (August 29, 2006). "Emmy-winning televangelist on path toward sainthood: Sheen would be 1st American-born man canonized". Chicago Sun-Times (HighBeam Research). http://www.highbeam.com/doc/1P2-1634110.html. பார்த்த நாள்: 2012-07-16.
- "Fulton J. Sheen". Nndb.com. பார்த்த நாள் 2012-07-07.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
புதிய பட்டம் ஆட்சிப்பீடம் உருவாக்கப்பட்டது |
— பட்டம் சார்ந்தது — செசாரியனாவின் ஆயர் 1951–1966 |
பின்னர் ஆஞ்செலோ ஃபெலிசி |
முன்னர் ஜேம்ஸ் இ. கீனெரி |
ரோசெஸ்டரின் ஆயர் 1966–1969 |
பின்னர் ஜோசஃப் லியோட் ஹோகன் |
புதிய பட்டம் ஆட்சிப்பீடம் உருவாக்கப்பட்டது |
— பட்டம் சார்ந்தது — நியூபோர்டின் பேராயர் 1969–1979 |
பின்னர் ஹொவார்ட் ஜி. டிரிப் |