ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு
ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசுகள் (Fukuoka Asian Culture Prizes) ஆசியப் பண்பாடுகளின் தனியான மற்றும் பல்வேறு தன்மைகளையும் பேணுவதற்கு ஆற்றிய பணிகளுக்காக உலகளாவிய ரீதியில் தனிநபருக்கோ அல்லது ஓர் அமைப்பிற்கோ வழங்கப்படும் பணப்பரிசாகும். இப்பரிசை ஜப்பானின் ஃபுக்குவோக்கா நகரமும், யோக்கடோப்பீயா நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. இப்பரிசுத் திட்டத்தில் பெரும் பரிசு (the Grand Prize), கல்விப் பரிசு (the Academic Prize), கலை மற்றும் பண்பாட்டுக்கான பரிசு (Arts and Culture Prize) ஆகிய மூன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் 3 மில்லியன் யென் பணப்பரிசு வழங்கப்படுகிறது.
ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டு பரிசு Fukuoka Asian Culture Prize | |
விருதுக்கான காரணம் | ஆசியப் பண்பாடுகளின் தனியான மற்றும் பல்வேறு தன்மைகளையும் பேணுவதற்கு ஆற்றிய பணிகளுக்காக |
வழங்கியவர் | ஃபுக்குவோக்கா நகரம் யோக்கடோப்பிய அமைப்பு |
நாடு | ![]() |
முதலாவது விருது | 1990 |
அதிகாரபூர்வ தளம் |
---|
கிழக்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்காசியா (பாகிஸ்தானுக்குக் கிழக்கேயுள்ள நாடுகள்) ஆகிய பகுதிகளில் இருந்து விருதாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
பரிசு பெற்ற சிலர்
- அகிரா குரோசாவா (1990)
- ரவி சங்கர் (1991)
- பத்மா சுப்பிரமணியம் (1994)
- ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா (1998)
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.