2018 வங்காளதேசப் பொதுத் தேர்தல்


வங்காளதேசப் பொதுத் தேர்தல் (2018 Bangaladesh general elections), வங்காளதேச நாடாளுமன்றத்தின் 300 உறுப்பினர்கள், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கு, 30 டிசம்பர் 2018 அன்று தேர்தல் நடைபெற்றது. [1][2]

2018 வங்காளதேசப் பொதுத் தேர்தல்

30 டிசம்பர் 2018
 
கட்சி அவாமி லீக் மக்கள் முன்னணி (Gano Forum)
கூட்டணி பெருங்கூட்டணி ஐக்கிய தேசியக் கூட்டணி


முந்தைய பிரதம அமைச்சர்

சேக் அசீனா
அவாமி லீக்

பிரதம அமைச்சர் -தெரிவு

TBD

வாக்களிப்பு முறைகள்

350 உறுப்பினர்களைக் கொண்ட வங்காளதேச நாடாளுமன்றத்தின், 300 உறுப்பினர்கள் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[3]மீதமுள்ள 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களை அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைப் படி, உரிய அரசியல் கட்சிகள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவர்.[4] நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

வங்கதேசம் முழுவதும் 100 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க 40,199 வாக்குச் சாவடிகள் உள்ளது. [5]

இத்தேர்தலில் ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளில் மின்னனு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்த வங்கதேச தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. [6]

கூட்டணிகளும், தோழமைக் கட்சிகளும்

இந்த பொதுத் தேர்தலின் போது, முக்கிய எதிர்கட்சித் தலைவரும், வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான காலிதா சியா, தேசத் துரோக வழக்கில் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற 2014 பொதுத் தேர்தலை புறக்கணித்த காலிதா சியாவின் வங்காளதேச தேசியக் கட்சி, இம்முறை ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி சார்பாக போட்டுயிடுகிறது. ஆனால் காலிதா சியா தற்போது குற்ற வழக்கில் சிறையில் உள்ளதால் தேர்தலில் போட்டியிடவில்லை.[7]

இப்பொதுத்தேர்தலில் வங்கதேச அரசியல் கட்சிகள், அவாமி லீக் தலைவரான சேக் அசீனா தலைமையிலான மகாகூட்டணி மற்றும் கமால் உசைன் தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டணிகள் தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலை இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி (Left Democratic Alliance) புறக்கணித்துள்ளது.

  • மகா கூட்டணி (Grand Alliance): சேக் அசீனாவின் அவாமி லீக் உள்ளிட்ட எட்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகிறது.
  • ஐக்கிய தேசிய ஐக்கிய முன்னணி (Jatiya Oikya Front): கமால் உசைன் தலைமையிலான ஐக்கிய தேசியக் முன்னணியில் 13 அரசியல் கட்சிகள் போட்டியிடுகிறது.
  • இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி (Left Democratic Alliance): தேர்தலை புறக்கணித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளும், உயிர்க்கொலைகளும்

9 மற்றும் 12 டிசம்பர் 2018 இடையே, தேர்தல் பிரசாரத்தின் போது 47 தேர்தல் வன்முறை நிகழ்வுகளில், 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 560 பேர் காயமடைந்தனர்.[8]

தேர்தல் நாளன்று (30 டிசம்பர் 2018) ஆளும் அவாமி லீக் கூட்டணி மற்றும் எதிர்கட்சியான வங்காளதேச தேசியக் கட்சி கூட்டணித் தொண்டர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் நடைபெற்ற வன்முறைகளில் 17 பேர் கொல்லப்பட்டனர்.[9]

தேர்தல் முடிவுகள்

மொத்தமுள்ள 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கலவரங்களால் ஐக்கிய தேசிய கூட்டணி தேர்தலிருந்து விலகியது. 30 டிசம்பர் 2018 அன்று பொதுத் தேர்தல் முடிந்தவுடன், நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சேக் அசீனாவின் அவாமி லீக் கட்சி 246 தொகுதிகளிலும், ஆளும் அரசின் பெருங்கூட்டணியின் பிற கட்சிகள் 32 தொகுதிகளிலும், எதிர்கட்சிகள் 10 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.[10]

கூட்டணி கட்சி வாக்குகள் % இடங்கள் ±
பெருங்கூட்டணிஅவாமி லீக்246+12
தேசியக் கட்சி (எர்சாத்)23-13
வங்கதேச உழைப்பாளர்கள் கட்சி3-3
ஜாதிய சமாஜ்தாந்திரிக் தளம்2-3
வங்காளதேச விகல்ப தர கட்சி2+2
ஜாதிய கட்சி (மஞ்சு)1-1
வங்கதேச தரிக்கத் கூட்டமைப்பு1-1
வங்கதேச தேசிய முன்னணி0-1
ஐக்கிய தேசிய கூட்டணிவங்காளதேச தேசியக் கட்சி8+8
கணோ போரம்2+2
வங்கதேச ஜமாத் இ இசுலாம்0-
ஜாதிய சமாஜ்தாந்திரிக் தளம்0-
ஐக்கிய நகோரிக் கட்சி0-
விவசாயிகள் தொழிலாளர்கள் மக்கள் லீக்0-
வங்கதேச கிலாபாத் மஜ்லீஸ்0-
வங்கதேச முஸ்லீம் லீக்0-
தேசிய ஜனநாயகக் கட்சி0-
தேசிய ஐக்கிய முன்னணி0-
கல்யாண் கட்சி0-
வங்கதேச லிபரல் ஜனநாயகக் கட்சி0-
சுயேச்சைகள்3-
Source: Daily Star

தேர்தல் முடிவுகள் குறித்த சர்ச்சைகள்

வங்கதேச எதிர்கட்சிகள் முறையற்ற இப்பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாததால், மறு தேர்தல் நடத்த போராட்டங்கள் நடத்துகிறது. [11]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.