2013 பாகிஸ்தான் நிலநடுக்கம்

2013 பாகிஸ்தான் நிலநடுக்கம் என்பது Mw 7.7 என்ற அளவில், 66 கிலோ மீட்டர் அளவில் நிலநடுக்க மையம் கொண்டு பலுசிஸ்தானின் அவரான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும்.[2] இதில் குறைந்தது 370 பேர் உயிரிழந்தனர்.[1]

2013 பாகிஸ்தான் நிலநடுக்கம் (2013 Pakistan earthquake)
நாள்24 செப்டம்பர் 2013
தொடக்க நேரம்11:29:48 UTC (16:29:48 பாகிஸ்தான் திட்ட நேரம்)
நிலநடுக்க அளவு7.7 Mw
ஆழம்20.0 km (12.4 mi)
நிலநடுக்க மையம்27.000°N 65.514°E / 27.000; 65.514 (பாகிஸ்தான் நிலநடுக்கம்)
பாதிக்கப்பட்ட பகுதிகள் பாக்கித்தான்
 இந்தியா
 ஓமான்
பின்னதிர்வுகள்10
உயிரிழப்புகள்370 பேர் இறப்பு[1]

நிலநடுக்கம் பற்றிய தகவல்கள்

அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு நிலநடுக்கம் 24 செப்டம்பர் 2013 அன்று 11:29:48 UTC என்ற நேரத்தில் 27.000°N, 65.514°E என்ற இடத்தில் நடைபெற்றதாக அறிவித்தது. இந்நிலநடுக்கமானது 20 கிலோமீட்டர்கள் (12 mi) ஆழத்தில் ஏற்பட்டது. பாகிஸ்தானின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் Mw 7.7 அளவில் 16:29:49  பா.தி.நே (UTC+5:00) என்ற நேரத்தில் 27.09°N, 65.61°E என்ற இடத்தில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவித்தது.[3] இந்நிலநடுக்கம் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நீடித்ததாகவும் கராச்சி, ஐதராபாத், இஸ்லாமாபாத், லர்கானா, லாகூர் ஆகிய நகரங்களில் உள்ளோர் கூறப்படுகிறது.[4][4] இந்த நடுக்கம் இந்தியாவின் டெல்லி|டெல்லியிலும்]] உணரப்பட்டது. சில கட்டங்கள் ஆடின.[5] மேலும், மஸ்கட், ஓமன்—இந்நகரங்கள் நிலநடுக்க மையத்திலிருந்து 800 கிமீ தொலைவிலிருந்தும் அங்கும் மிதமான அதிர்வுகள் உணரப்பட்டன.[6]

விளைவுகள்

இந்நிலநடுக்கத்தால் 370 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[1] அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் PAGER அறிக்கைபடி, சிவப்பு நிற எச்சரிக்கை தரப்பட்டது (அதாவது 1,000 முதல் 10,000 இறப்புகள் ஏற்பட 35% வாய்ப்பிருக்கிறது; 10,000 முதல் 1,00,000 வரை உயிரிழப்பு ஏற்பட 27% வாய்ப்பிருக்கிறது) ஆரஞ்சு நிற பொருளாதார எச்சரிக்கையும் தரப்பட்டது. (அதாவது US$100 மில்லியன்-$1 பில்லியன் வரை இழப்பு ஏற்பட 35% வாய்ப்பிருக்கிறது; US$1-10 பில்லியன் வரை இழப்பு ஏற்பட 26% வாய்ப்பிருக்கிறது.)[7] இந்த நிலநடுக்கத்தால் கவடார் நகரின்dsghhffchh கரையிலிருந்து 1.0 கிமீ தொலைவில் புதிய தீவு கடலில் தோன்றியுள்ளது. [8]

மேற்கோள்கள்

  1. "At least 208 killed in Balochistan earthquake". Dawn (25 September 2013). பார்த்த நாள் 25 September 2013.
  2.  This article incorporates public domain material from the United States Geological Survey document: "M7.7 – 66km NNE of Awaran, Pakistan".
  3. "Latest Earthquakes". Pakistan Meteorological Department—National Seismic Monitoring Centre, KARACHI. பார்த்த நாள் 24 September 2013.
  4. "Quake in southern Pakistan kills 2, damages houses". The Hindu. பார்த்த நாள் 24 September 2013.
  5. "Powerful earthquake strikes Pakistan's Balochistan". BBC News. பார்த்த நாள் 24 September 2013.
  6. Vaidya, Sunil. "Tremors from Pakistan quake felt in Muscat". gulfnews.com. பார்த்த நாள் 24 September 2013.
  7. "M7.8 – 69km NNE of Awaran, Pakistan (BETA)". Earthquake Hazards Program. United States Geological Survey. பார்த்த நாள் 24 September 2013.
  8. Pakistan quake island off Gwadar 'emits flammable gas
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.