2011 கோப்பா அமெரிக்கா
2011 கோப்பா அமெரிக்கா 2011 (2011 Copa América), காம்பனேடோ சூதாமெரிக்கானோ கோப்பா அமெரிக்கா (Campeonato Sudamericano Copa América) அல்லது கோப்பா அமெரிக்கா அர்ச்சென்டினா 2011 என்றெல்லாம் அறியப்படும் பன்னாட்டு கால்பந்துப் போட்டிகள் தென் அமெரிக்க கால்பந்து அணிகளிடையே நடைபெறும் கோப்பா அமெரிக்காவின் 43வது பதிப்பாகும். கான்மேபோல் என்ற அமைப்பால் நடத்தப்படும் இந்தப்போட்டிகள் சூலை 1, 2011 முதல் சூலை 24, 2011 வரை அர்ச்சென்டினாவில் நடைபெற்றன.
கோப்பா அமெரிக்கா அர்ச்சென்டினா 2011 | |
---|---|
![]() | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | ![]() |
நாட்கள் | July 1 – July 24 |
அணிகள் | 12 (2 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்குகள் | 8 (8 நகரங்களில்) |
மூன்றாம் இடம் | ![]() |
நான்காம் இடம் | ![]() |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 26 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 54 (2.08 /ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | ![]() (5 கோல்கள்) ![]() (4 கோல்கள்) |
சிறந்த ஆட்டக்காரர் | ![]() |
← 2007 2015 → | |
2011ஆம் ஆண்டுப்போட்டிகளின் இறுதியாட்டத்தில் உருகுவே 3-0 என்ற கோல்கணக்கில் பராகுவே அணியை வென்று பதினைந்தாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாமிடம் பெற்ற பராகுவே போலிவியா கோப்பையை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் பெரு வெனிசூலாவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து மூன்றாமிடத்தைப் பிடித்தது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.