1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (IV Asian Games) ஆகஸ்ட் 24 1962 முதல் செப்டெம்பர் 4 1962 வரை இந்தோனேசியா ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் 16 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1460 வீரர்கள் பங்கேற்றனர். நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன.

நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்ஜகார்த்தா, இந்தோனேசியா
பங்கெடுத்த நாடுகள்16
பங்கெடுத்த வீரர்கள்1,460
நிகழ்வுகள்13
துவக்க விழாஆகத்து 24, 1962
நிறைவு விழாசெப்டம்பர் 4, 1962
திறந்து வைத்தவர்சுகர்னோ
முதன்மை அரங்கம்புங் கர்னோ அரங்கம்
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு சப்பான்
1958 (முந்தைய) (அடுத்த) 1966

பங்குபெற்ற நாடுகள்

விளையாட்டுக்கள்

அதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

  • தடகளம்
  • கூடைப் பந்து
  • காற்பந்தாட்டம்
  • நீச்சற் போட்டி
  • பாரம்தூக்குதல்
  • குத்துச்சண்டை
  • துப்பாக்கிச்சுடு
  • மற்போர்
  • சைக்கிள் ஓட்டம்
  • ஹொக்கி
  • மேசைப்பந்து
  • டெனிஸ்
  • கரப்பந்து

மொத்தப் பதக்கங்கள்

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 127
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 126
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 128
  • மொத்தப் பதக்கங்கள் - 381

நாடுகள் பெற்ற பதக்கங்கள்

      நடத்திய நாடு: இந்தோனேசியா

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சப்பான்736523161
2 இந்தோனேசியா21263077
3 இந்தியா12132752
4 பிலிப்பீன்சு741627
5 தென் கொரியா44715
6 பாக்கித்தான்34411
7 தாய்லாந்து25512
8 மலாயா23510
9 மியான்மர்21710
10 சிங்கப்பூர்1012
11 இலங்கை0123
12 ஆங்காங்0011
மொத்தம்127126128381
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.