வள்ளி (அணிகலன்)

வள்ளி என்பது போரின்போது போரிடும் வயவர் சூடும் அடையாளப் பூ. இதனை 'வாடா வள்ளி' எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இது அரசன் வழங்கிய பூ ஆனதால் வள்ளி எனப்பட்டது. இது எந்தக் குடியைச் சேர்ந்தவன் என்பதை உணர்த்தும் அடையாளம். பனை, வேம்பு, ஆத்தி போன்ற எந்தப் பூவாகவும் இருக்கலாம்.

இந்தப் பூவைச் சூடியவன் போரில் புறமுதுகிட்டு ஓடாத வீரக் கழலும் அணிந்திருப்பான்.

ஆனிரைகளைக் களவாடிக் கவர்ந்துவரும் போர்ப்பாங்கு வெட்சித்திணை எனப்படும்.
அதில் 14 துறைகள் உண்டு.
மற்றும் களவாடிய ஆனிரைகளை மீட்கும் கொற்றவைநிலையும் வெட்சித்திணையே.
இந்தக் கொற்றவை நிலையில் 21 துறைகள் உண்டு.
இந்த 21 துறைகளில் ஒன்று வயவர் வாடாவள்ளி சூடுதல்.
போந்தை, வேம்பு, ஆர்(ஆத்தி) என்னும் பூக்களைச் சூடி வேந்தர்கள் போரிடுவர்.
அப்போது அவர்களது படைவீரர்கள் அதே பூவைச் சூடிப் போரிடுவர்.
அந்தப் பூ வாடாத பொற்பூவாக [1] இருக்கும். இந்த வயவர் சூடிய பூவுக்கு வாடாவள்ளி என்று பெயர். [2]

இதையும் காண்க

அடிக்குறிப்பு

  1. இரும்பையும் பொன் என்னும் சொல்லால் குறிப்பிடுவர்
  2. வாடா வள்ளி வயவர் ஏந்திய ஓடாக் கழல்நிலை - தொல்காப்பியம் 3-63-6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.