யோகான் கோட்பிரீடு கல்லே
யோகான் கோட்பிரீடு கல்லே (Johann Gottfried Galle) (9 ஜூன் 1812 – 10 ஜூலை 1910) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் செருமனி இரேடிசைச் சார்ந்தவர். இவர் பெர்லின் வான்காணகத்தில் 1846 செப்டம்பர் 23 இல் தன் மானவரான என்றிக் உலூயிசு தெ அரெசுட்டுவுடன் இணைந்து நெப்டியூனை முதன்முதலாக தான் நோக்குவது நெப்டியூன் தான் என்ற உறுதியோடு கண்டுபிடித்தார் . [[உர்பெய்ன் இலெ வெரியர் நெப்டியூன் நிலவுவதையும் அதன் சரியான இருப்பையும் முன்கணித்தார். இந்த வான்கோள ஆயங்கலை வெரியர் கல்லேவுக்கு அனுப்பிவைத்துச் சரிபார்க்கச் சொன்னார். அன்றிரவே கல்லே அவர் குறிப்பிட்ட முன்கணித்த இடத்தில் இருந்து ஒரு பாகை தள்ளி நெப்டியூனைக் கண்டுபிடித்தார். இது வானியக்கவியலுக்கு மிகப்பெரும் வெற்றியாக விளங்கியது. இந்நாள் 19 ஆம் நூற்றாண்டு அறிவியலிலேயே குறிப்பிட்த்தக்க நாளாகும்.
யோகான் கோட்பிரீடு கல்லே Johann Gottfried Galle | |
---|---|
![]() யோகான் கோட்பிரீடு கல்லே | |
பிறப்பு | ஜூன் 9, 1812 இரேடிசு, செருமனி |
இறப்பு | இறப்பும் அகவையும் போட்சுடாம், செருமனி |
தேசியம் | செருமானியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | பெர்லின் வான்காணகம் பிரெசுலாவு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நெப்டியூன் கண்டுபிடிப்பு |
விருதுகள் | இலாலண்டே பரிசு (1839) |
கையொப்பம் ![]() |


_Johann_Gottfried_Galle.jpg)
இளம்பருவம்
கல்லே கிராப்பன்கைனிசென் நகருக்கு அருகில் அமைந்த இரேடிசுக்கு இரு கி.மீ தள்ளியிருந்த பாப்சுவுட் வீட்டில் பிறந்தார். இவரது தந்தையார் யோகான் கொட்பிரீடு கல்லெ (1790-1853) ஆவார். இவரது தாயார் பன்னியர் எனப்படும் என்றியேட்டே (1790–1839) ஆவார்.[1] இவரது தந்தையார் தார் அடுப்பு இயக்கியவர் ஆவார். இவர் விட்டென்பர்கு பள்லியில் படித்தார். பின்னர் பெர்லின் அம்போல்ட் பல்கலைக்கழகத்தில் 1830 முதல் 1833 வரை கல்வி பயின்றார். பிரகு கூபென் பள்ளியில் கணிதவியல், இயற்பியல் ஆசிரியர் ஆனார். பின்னர், பெர்லின் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
பெர்லின் வான்காணகம்
புதிய பெர்லின் வான்காணகம் முழுமையடைந்த்தும், கல்லே 1835 இல் யோகான் பிரான்சு என்கே அவர்களிடம் உதவியாலராகச் சேர்ந்தார்.அங்கே இவர் 16 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தார். அப்போது ஜோசப் வான் பிரான்கோபரின் 9 அங். (22.5 செமீ) பொருள்வில்லையுள்ள தொலைநோக்கியைப் பயன்படுத்தினார். இவர் 1838 இல் காரிக்கோளின் உள்வலயத்தைக் கண்டுபிடித்தார். 1839 திசம்பர் 2 இல் இருந்து 1840 மார்ச்சு 6 வரையிலான கால இடைவெளியில் இரண்டு புதிய வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார். கல்லேவுக்கு 1845 இல், முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரது முனவர் பட்ட ஆய்வுரை 1706 ஆம் ஆண்டு அக்தோபர் 20 முதல் 23 வரையிலான நாட்களில் ஓலே உரோமரின் விண்மீன்கள், கோள்கள் வான் நடுவரைக்கடப்புகலைப் பற்றிய நோக்கீடுகளை உய்யநிலையில் ஆய்வு செய்து விவாதிப்பதே ஆகும்.
பிந்தைய வாழ்க்கை
கல்லே 1897 இல் போட்சுடாமுக்குத் திரும்பினார். அங்கே இவர் தன் 98 ஆம் அகவையில் இறந்தார். இவர் மனைவியும் இரு மகன்களாகிய ஆந்திரேயாசு கல்லேவும் ஜார்ஜ் கல்லேவும் இவரைப் பிரிந்து வாழ்ந்தனர்.
கிராப்பன்கைனிசெனில் (Gräfenhainichen)இவருக்கு ஒரு நினைவுச் சின்னம் 1977 இல் எழுப்பப்பட்டுள்ளது.
கல்லே நிலாக் குழிப்பள்ளமும் ஏப்பி பேசு எனும் செவ்வாய்க் கல்லே குழிப்பள்ளமும் ஆகிய இருமொத்தல் குழிப்பள்ளங்கள் இவர் பெயர் இடப்பட்டுள்ளன.குறுங்கோள் 2097 கல்லே, நெப்டியூன் வலயங்களும் இவர் பெயரில் அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
- Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58496.html. பார்த்த நாள்: August 22, 2012.
வெளி இணைப்புகள்
Google celebrated Johann Gottfried Galle's 200th Birthday with Google Doodle https://www.google.com/doodles/johann-gottfried-galles-200th-birthday!
- J. Galle @ Astrophysics Data System
நினைவேந்தல்கள்
- Franz, J. (1910). "Anzeige des Todes von Johann Gottfried Galle" (in de). Astronomische Nachrichten 185 (19): 309. doi:10.1002/asna.19101851906. Bibcode: 1910AN....185..309F.
- Chant, C. A. (1910). "Johann Gottfried Galle". Journal of the Royal Astronomical Society of Canada 4: 379. Bibcode: 1910JRASC...4..379C.
- "Obituary Notices : Associates : Galle, Johann Gottfried". Monthly Notices of the Royal Astronomical Society 71: 275. 1911. doi:10.1093/mnras/71.4.272. Bibcode: 1911MNRAS..71R.275..
- "Obituaries: G. V. Schiaparelli, J. G. Galle, J. B. N. Hennessey J. Coles, J. E. Gore". The Observatory 33: 311. 1910. Bibcode: 1910Obs....33..311..