மேகா (2014 திரைப்படம்)
மேகா 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். த்ரில்லர் வகையை சேர்ந்த இப்படத்தை இயக்கியவர் கார்த்திக் ரிஷி.[1] ஆல்பர்ட் ஜேம்ஸ் மற்றும் S. செல்வக்குமார் கூட்டாக தயாரித்த இப்படத்தில் அஸ்வின் ககுமனு, சிருஷ்டி டங்கே மற்றும் அங்கனா ராய் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜெயப்பிரகாசு, ரவி பிரகாசு, ஆடுகளம் நரேன், மீரா, நித்யா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.[2] இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆகஸ்ட் 29, 2014 அன்று வெளிவந்தது.[3]
மேகா | |
---|---|
![]() | |
இயக்கம் | கார்த்திக் ரிஷி |
தயாரிப்பு | ஆல்பர்ட் ஜேம்ஸ் S. செல்வக்குமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | R. B. குருதேவ் |
படத்தொகுப்பு | ராம் சுதர்சன் |
கலையகம் | GB ஸ்டூடியோ |
விநியோகம் | JSK ஃபிலிம் கார்பரேசன் |
வெளியீடு | ஆகத்து 29, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- அஸ்வின் ககுமனு - முகிலன் (முகில்)
- சிருஷ்டி - மேகவதி சீனிவாசன் (மேகா)
- அங்கனா ராய் - துளசி
- ஜெயப்பிரகாசு - ஜெயகுமார்
- விஜயகுமார் - ராகவன்
- ஒய். ஜி. மகேந்திரன்
- ஆடுகளம் நரேன் - ஜோசப் பெர்னான்டோ
- ரவி பிரகாசு - சீனிவாசன்
- மீரா கிருஷ்ணன்
- சசிகுமார் - மணி
- சாய் பிரசாந்த்
- நித்யா
- பேபி யுவினா - யுவி
இசை
இளையராஜா பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்தார். இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றன. அவற்றில் ஒன்று அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் இடம்பெற்ற "புத்தம் புது காலை" என்ற பாடலாகும். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பிடித்திருந்ததால் இதில் பணியாற்ற சம்மதித்ததாக இளையராஜா தெரிவித்தார்.[4]
- முகிலோ மேகமோ- யுவன் சங்கர் ராஜா, ரம்யா என்.எஸ்.கே.
- செல்லம் - யுவன் சங்கர் ராஜா, ரம்யா என்.எஸ்.கே.
- என்ன வேண்டும் - கார்த்திக், பிரியதர்சினி
- ஜீவனே - இளையராஜா
- புத்தம் புது காலை- அனிதா கார்த்திகேயன்
- கள்வனே - ஹரிசரன், ரம்யா என்.எஸ்.கே.
சான்றுகள்
- "It's an honor to work with Ajith – Ashwin". Behindwoods (2 மார்ச் 2013). பார்த்த நாள் 7 ஏப்ரல் 2013.
- "Megha". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (23 மார்ச் 2013). பார்த்த நாள் 7 ஏப்ரல் 2013.
- "JSK Films to come with three flicks with different themes". IndiaGlitz (21 மே 2014). பார்த்த நாள் 26 மே 2014.
- http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-megha-musical-cloudburst/article5124165.ece
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.