முசுத்தாபிசூர் ரகுமான்

முசுத்தாபிசூர் ரகுமான் (Mustafizur Rahman, பிறப்பு: 6 செப்டம்பர் 1995) வங்காளதேச பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடக்கை விரைவுப் பந்து வீசாளராக அடையாளம் காணப்படுகிறார். இவர் தான் விளையாடிய முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் தொடர்ப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் (13) கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். முதலாவது தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் "சிறந்த ஆட்டக்காரர்" என்ற விருதையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

முசுத்தாபிசூர் ரகுமான்
Mustafizur Rahman
মুস্তাফিজুর রহমান

2018 இல் ரகுமான்
வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முசுத்தாபிசூர் ரகுமான்
உயரம் 1.82 m (5 ft 11 12 in)
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை இடக்கை
பந்துவீச்சு நடை இடக்கை நடுத்தர-விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு 21 சூலை, 2015:  தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு 31 சனவரி, 2018:  இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 118) 18 சூன், 2015:  இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி 28 செப்டம்பர், 2018:   இந்தியா
சட்டை இல. 90
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2014–இன்று குல்னா
2016–இன்று முகமெதான் விளையாட்டுக் கழகம்
2015–2016 டாக்கா டைனமைட்சு
2016–இன்று லாகூர் காலண்டர்சு
2016–2017 சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2016 சசெக்சு
2017–இன்று ராஜ்சாகி கிங்க்சு
2018–இன்று மும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒநாபஇ20பமு.த
ஆட்டங்கள் 4 34 19 19
ஓட்டங்கள் 7 35 11 38
துடுப்பாட்ட சராசரி 1.75 5.33 2.00 3.80
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 4 18* 6 14
பந்து வீச்சுகள் 604 893 420 2718
இலக்குகள் 12 64 32 56
பந்துவீச்சு சராசரி 23.16 16.00 14.92 20.19
சுற்றில் 5 இலக்குகள் 0 3 1 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 - - 0
சிறந்த பந்துவீச்சு 4/37 6/43 5/22 5/28
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 3/– 3/– 4/-

செப்டம்பர் 28, 2018 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ

ரகுமான் 2015 ஏப்ரலில் பாக்கித்தான் அணிக்கு எதிராக இ20 போட்டியில் முதன் முதலில் பன்னாட்டுப் போட்டியாளராக அறிமுகமானார்.[1] அதே ஆண்டில் தனது முதலாவது ஒருநாள் போட்டியை இந்தியாவுக்கு எதிராகவும்,[2][3] தேர்வுப் போட்டியை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் விளையாடினார்.[4]

பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்னர், ரகுமான் 19-அகவைக்குட்பட்டோருக்கான 2014 உலக்க்கிண்ணப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்..[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.