நகரம் மறுபக்கம்

நகரம் மறுபக்கம் (Nagaram Marupakkam) 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். சுந்தர்.சி., இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.[1] அவரின் மனைவியும் (குஷ்பூ) சேர்ந்து இப்படத்தை தயாரித்தார். அனுயா, வடிவேலு, போஸ் வெங்கட், ஜார்ஜ் விஷ்ணு, பொன்னம்பலம், வி. எஸ் ராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 150 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்தத் திரைப்படம், தமன் இசையில், 19 நவம்பர் 2010 ஆம் தேதி வெளியானது. வடிவேலு நடித்த "ஸ்டைல் பாண்டி" கதாபாத்திரம் மிகவும் பிரபிலமான ஒன்றாகும்.[2]

நடிகர்கள்

சுந்தர்.சி., அனுயா பகவத், வடிவேலு, போஸ் வெங்கட், ஜார்ஜ் விஷ்ணு, சுளிலே குமார், பொன்னம்பலம், விச்சு விஸ்வநாத், பெசன்ட் ரவி, விட்டால் ராவ், சித்ரா ஷெனாய், நளினி, வி. எஸ். ராகவன், ஆர். எஸ். சிவாஜி, ஹல்வா வாசு, கிரேன் மனோகர், கவுதம் சுந்தர்ராஜன், என்னத்த கன்னையா, மனோ, ஜி. ஸ்ரீநிவாசன், கௌதமி வேம்புநாதன்,பாஸ்கி, விகாஸ், ஷோபனா, கிருஷ்ணமூர்த்தி, முத்துக்காளை, பாவா லக்ஷ்மணன், வேல்முருகன், சக்திவேல், வேன்கள் ராவ், மர்யம் ஜகாரியா.

கதைச்சுருக்கம்

குற்றவாளி செல்வம் (சுந்தர் சி.) தண்டனை காலம் முடிய வெளியே வருகிறான். தவறுகளை தவிர்த்து நல்ல வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவு செய்கிறான். அந்நிலையில், ஹைதெராபாத்தில் அவனுக்கு வேலை ஒன்றுக் கிடைக்கிறது. அங்கே, நாட்டிய மங்கை பாரதியை சந்திக்கிறான். பின்னர், அவள் வசம் காதலும் கொள்கிறான். நல்லவனாக வாழ முயற்சித்தாலும், அவன் செய்த கடந்த கால தப்புகள் அவனை விடாமல் துரத்த துவங்கின. அவைகளிலிருந்து தப்பித்து சமாளித்து எவ்வாறு நல்லவனாக செல்வம் வாழ்ந்தான் என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

இந்தத் திரைப்படத்தின் இசை அமைப்பாளர் எஸ். தமன் ஆவார்[3]. ஒலித்தொகுப்பில் உள்ள ஆறு பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து ஆவார். பாடல்கள் யாவும் திங்க் மியூசிக் இந்தியா[4] என்ற நிறுவனம் வாயிலாக வெளியாயின.

வரவேற்பு

சுந்தர்.சி பாணியிலிருந்து வேறுபட்ட திரைப்படமாக அமைந்ததாகவும், பலத் திருப்பங்களை கொண்ட விறுவிறுப்பான காட்சிகளை கொண்டதாகவும், அங்கும் இங்கும் சில தவறுகள் இருந்தாலும் அருமையாக திரைப்படமாக இருந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டன.[5][6][7]

வெளி-இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "http://timesofindia.indiatimes.com/".
  2. "http://sify.com".
  3. "http://www.behindwoods.com/".
  4. "https://www.saavn.com/".
  5. "http://behindwoods.com".
  6. "http://www.sify.com".
  7. "http://www.nowrunning.com".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.