டொனால்டு பிளெமிங் (வேதியியலாளர்)

டொனால்டு ஜியார்ஜ் பிளெமிங் (Donald George Fleming, பிறப்பு  நவம்பர் 7, 1938) கனடா நாட்டு வேதியியலாளர் ஆவார். அவர் பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்து தனத இளங்கலைப் பட்டத்தையும், முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலையில் 1967 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். இவர் தற்போது பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[1][2]

டொனால்டு பிளெமிங்
பிறப்பு நவம்பர் 7, 1938 (1938-11-07)
கனடா
Alma materகொலம்பியா பிரிட்டிசு பல்கலைக் கழகம், கொலம்பியா, கலிபோர்னியா பல்கலைக் கழகம், பெர்க்லி

1989 ஆம் ஆண்டில் அவர் ஒரு புதிய வகையான வேதிப்பிணைப்பு பற்றிய கொள்கை சார்ந்த தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். இந்த புதிய கொள்கை அதிர்வடையும் வேதிப்பிணைப்பினைப் பற்றியதாகும். இத்தகைய பிணைப்பு ஒரு குறுகிய காலமே நிலைத்திருக்கக்கூடிய ஒரு பிணைப்பு வகையாகும். இதன் இருப்பானது 2015 ஆம் ஆண்டில்  புரோமின்  விந்தையான மியோனியம் அணு ஆகியவற்றுக்கிடையேயான வினையைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டது.[3][4] பிளெமிங் இயல் வேதியியல் அறிவியல் ஆய்வுகளில் மியான் கற்றைகளின் பயன்பாடு குறித்த ஆய்வுக்காகவும் நன்கறியப்பட்டவர் ஆவார்.[5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.