சௌந்தரிய லகரி

சௌந்தரிய லகரி (சௌந்தர்ய லகரி) என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் இயற்றிய நூல்களில் ஒன்று.

ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் அம்பிகையைப் புகழ்ந்து வடமொழியில் ஒரு நூல் எழுதினார். அது 100 சுலோகங்களைக் கொண்டது. முதல் 40 சுலோகங்கள் அம்பிகையின் அருளைப் புகழ்கின்றன. இது ஆனந்த லகரி (ஆனந்த வெள்ளம்). அடுத்த 60 சுலோகங்கள் அம்பிகையின் அழகைப் புகழ்கின்றன. அது சௌந்தரிய லகரி (அழகு வெள்ளம்).

இதனை மொழிபெயர்த்து வீரை கவிராச பண்டிதர் தமிழில் எழுதினார்.

வடமொழி நூலிலுள்ள பகுப்பைப் போலவே 40, 60 என்னும் பகுப்பு தமிழ்நூலிலும் உள்ளது.

  • ’ஆனந்த லகரி, சௌந்தரிய லகரி, அலங்கார லகரி முற்றும்’ என நூலின் முடிவில் வரும் தொடர் [1] இந்த நூலமைப்பை விளக்கும் தொடர்.

நூலின் பாங்கைக் காட்டும் பாடல் ஒன்று எடுத்துக்காட்டுக்குத் தரப்படுகிறது.

சிவமெனும் பொருளும் ஆதி சத்தியொடு

சேரின் எத் தொழிலும் வல்லதாம்

இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது

அரிதெனா மறை இசைக்குமால்

தவபெரும் புவனம் எவ் வகைத் தொழில்

நடத்தி யாவரும் வழுத்து தாள்

அவனியின் கண் ஒரு தவமிலார் பணியல்

ஆவதோ பரவல் ஆவதோ [2]
  • சைவ எல்லப்ப நாவலர் என்பர் இவர் காலத்திலேயே இந்த நூலுக்கு ஒரு உரையும் எழுதியுள்ளார்.
  • சௌந்தரிய லகரி மகளிரை வசப்படுத்த உதவும் எனச் சிலர் நம்பினர்.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005

அடிக்குறிப்பு

  1. புலவர் புராணம்
  2. பாடல் 1
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.