செரோம் கே. செரோம்

செரோம் கே. செரோம் (Jerome Klapka Jerome, 2 மே 1859 – 14 சூன் 1927) ஒரு ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர் ஆவார். தொடக்க காலத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் நிராகரிக்கப்பட்டபோதும் பின்னர் நகைச்சுவை எழுத்தாளராகப் பிரபலமானார்.

செரோம் கே. செரோம்

செரோம் கே. செரோம்
தொழில் எழுத்தாளர்
இலக்கிய வகை நகைச்சுவை

நூல்கள்

இவரது த்ரீ மேன் இன் போட் முக்கியமான நகைச்சுவைப் புதினமாகும். ஐடியல் தாட்ஸ் ஆஃப் அன் ஐடியல் பெல்லோ (Idle Thoughts of an Idle Fellow), செகண்ட் தாட்ஸ் ஆஃப் அன் ஐடியல் பெல்லோ (Second Thoughts of an Idle Fellow) மற்றும் த்ரீ மேன் ஆன் பும்மெல் (Three Men on the Bummel) ஆகியவை குறிப்பிடத்தக்கப் படைப்பாகும். இவரெழுதிய சுயசரிதை நூல் மை லைப் அண்ட் டைம்ஸ் (My Life and Times) ஆகும்.[1]

இளமையும் கல்வியும்

இவர் இங்கிலாந்தின் கால்ட்மோர் (Caldmore) நகரில் பெற்றோருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். தனது கல்வியை மேரில்போன் கிராமர் பள்ளியில் முடித்தார். அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இருந்தாலும் தந்தையின் மறைவிற்குப் பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இலண்டன் வடமேற்கு தொடர்வண்டிப் பிரிவில் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் நடிப்புத் துறையிலும் சில காலம் ஈடுபட்டார்.

அங்கீகாரம்

  • பிரெஞ்சு வரைகலை புதினத் தொடருக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
  • 1984-ல் இவர் ஊரில் அருங்காட்சியம் திறக்கப்பட்டது.[2] (closed 2008)
  • இவரது த்ரீ மேன் இன் போட் புதினத்தில் இடம்பெற்ற காட்சி சிற்பமாகச் செதுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Jerome, Jerome (1926). My Life and Times. Hodder & Stoughton.
  2. Lambert, Tim "A Brief History of Walsall, England"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.