சூடான்

சூடான் (அரபு:السودان அஸ்-சூடான்) என்றழைக்கப்படும் சூடான் குடியரசு (அரபு: جمهورية السودان‎ ஜும்ஹரியத் அஸ்-சூடான்) ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது சிலவேளைகளில் வட சூடான் என அழைக்கப்படுகின்றது.[3][4] இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. எனினும், 2011இல் பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தென் சூடான் பகுதி தனி சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இது மாற்றமடைந்தது. இது தற்போது அல்ஜீரியா மற்றும் கங்கோ குடியரசுக்க அடுத்தபடியாக ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகின்றது.

السودان ‎
அஸ்-ஸூதான்
சூடான் குடியரசு

جمهورية السودان
ஜும்ஹூரியத் அஸ்-ஸூதான்
கொடி சின்னம்
குறிக்கோள்: "Al-Nasr Lana"  (அரபு மொழி)
"நாம் வெற்றி"
நாட்டுப்பண்: نحن جند لله جند الوطن  (அரபு மொழி)
நாங்கள் கடவுளுடனும் நாட்டினும் இராணுவம்
Location of சூடான்
தலைநகரம்கர்த்தூம்
15°31′N 32°35′E
பெரிய நகர் உம்துர்மான்
ஆட்சி மொழி(கள்) அரபு, ஆங்கிலம்
மக்கள் சூடானியர்
அரசாங்கம் தேசிய ஒன்றிய அரசு [1]
   குடியரசுத் தலைவர் அப்தல் பத்தா ரகுமான் பர்கான்[2]
   முதலாம் துணை தலைவர் சல்வா கீர்
   இரண்டாம் துணை தலைவர் அலி உஸ்மான் டாஹா
விடுதலை
   எகிப்திலிருந்தும் பிரித்தானியத்திலிருந்தும்
ஜனவரி 1 1956 
பரப்பு
   மொத்தம் 18,86,068 கிமீ2 (16வது)
7,28,215 சதுர மைல்
   நீர் (%) 6
மக்கள் தொகை
   2008 கணக்கெடுப்பு 30,894,000 (40வது)
   1993 கணக்கெடுப்பு 24,940,683
   அடர்த்தி 14/km2 (194வது)
36/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
   மொத்தம் $107.8 பில்லியன் (62வது)
   தலைவிகிதம் $2,522 9.6% (134வது)
மமேசு (2007) 0.521
Error: Invalid HDI value · 148வது
நாணயம் சூடானிய பெளண்ட் (SDG)
நேர வலயம் கிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒ.அ.நே+3)
   கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 249
இணையக் குறி .sd

வடக்கில் எகிப்தும், வடகிழக்கில் செங்கடலும், கிழக்கில் எரித்திரியாவும், தென்கிழக்கில் எத்தியோப்பியாவும், தெற்கில் தென் சூடானும், தென்மேற்கில் மத்திய ஆப்பிரிக்க குடியரசும், மேற்கில் சாட் நாடும், லிபியா வடமேற்கிலும் அமைந்துள்ளன. உட்புறமாக, நைல் நதி நாட்டை கிழக்கு மற்றும் மேற்கு அரைப்பகுதிகளாகப் பிரிக்கின்றன.[5] நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர்.[6]

சூடான் பண்டைய பல நாகரிகங்களான   குஷ், கெர்மா, நோபியாடியா, அலோடியா, மகுரியா, மெரொ மற்றும் பலவற்றுக்கு, உரைவிடமாக இருந்தது, இந்த நாகரீகங்கள் நைல் ஆற்றை ஒட்டி நெடுகிலும் செழித்தோங்கி இருந்தன. பேரரசுகளின் காலத்திற்கு முற்பட்ட காலத்தின் போது நுபியா, நாகடன், மேல் எகிப்து போன்றவை ஒரே மாதிரியானவையாக இருந்தன. சூடான் எகிப்துக்கு அருகாமையில் இருப்பதால், அதன் அண்மையில் உள்ள கிழக்குப் பகுதிகளின் பரந்த வரலாற்றில் பங்கு பெற்றது, சூடான் 6 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவமயமாக்கப்பட்டது, பின்வந்த 15 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மயமாக்கப்பட்டது.

சூடான் ஐக்கிய நாடுகள் சபை, ஆபிரிக்க ஒன்றியம், அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் அணிசேரா நாடுகள், இதேபோல் உலக வர்த்தக அமைப்பின் பார்வையாளர் நாடாக, போன்ற அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கின்றது.[7][8] இதன் தலைநகர் கர்த்தூம் ஆகும். நாட்டின் அரசியல், கலாசார மற்றும் வர்த்தகமையமாக கர்த்தூம் நகர் காணப்படுகின்றது. சூடான், ஒரு கூட்டாட்சி ஜனாதிபதி பிரதிநிதி ஜனநாயகக் குடியரசு நாடாகும். சூடானின் அரசியல் நடவடிக்கைகள் தேசிய சட்டமன்றம் என அழைக்கப்படும் ஒரு பாராளுமன்ற அமைப்பினால் நெறிப்படுத்தப்படுகின்றது.[9]   சூடான் சட்ட அமைப்பு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

பெயராய்வு

நாட்டின் பெயரான சூடான் என்பது சகாராவுக்கு தெற்கே உள்ள பகுதிகளை பொதுவாக குறிப்பிடப்பயன்படும் சொல்லாகும், இச்சொல்  மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு மத்திய ஆபிரிக்கா வரையிலான பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டு வந்தது.  இந்த பெயர் பிலாடி அஸ்-சூதன் (بلاد السودان), அல்லது "கறுப்பர்களின் நிலங்கள்" [10] என்ற அரபு மொழிச் சொல்லில் இருந்து வந்தது.

வரலாறு

வரலாற்றுக்கு முற்பட்ட சூடான்

பெரிய சேற்றுசெங்கல் ஆலயம், மேற்கு துபாத்தா என அறியப்படுகிறது. கெர்மா பழைய நகரில் அமைந்துள்ளது.

கி.மு.எட்டாயிரம் வருட காலப்பகுதியில் புதிய கற்காலத்தின் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு உடல் உழைப்பில்லாத வழிமுறையுடையவர்களாக சேற்று-செங்கற்கலாலான கோட்டை கிராமங்களில் குடியேறினர். அவர்கள் நைல் நதியில் மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடல் போன்ற செயல்களில் ஈடுபட்டடனர். மேலும் அப்பகுதியில் தானியங்களைப் சேகரித்ததுடன், கால்நடை மேய்ச்சலிலும் ஈடுபட்டனர்.[11] கி. மு. ஐந்தாயிரம் ஆண்டு காலப்பகுதியில் [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தவர்கள்] சகாராவின் உலர் பகுதியிலிருந்து நைல் சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்ந்ததுடன், அங்கு விவாசயத்தில் ஈடுபட்டனர்.

குஷ் இராச்சியம்

மெரோயில் அமைந்துள்ள நுபியன் பிரமிட்கள்.

குஷ் இராச்சியமானது, ஆதிகால நுபியன் மக்களைக் கொண்ட ஒரு இராச்சியமாகக் காணப்பட்டது. இது நீல நைல் ஆறு, வெள்ளை நைல் ஆறு மற்றும் அட்பரா ஆறு என்பன சங்கமிக்கும் இடத்தில் மையப்படுத்தப்பட்டதாக அமைந்திருந்தது. இது வெண்கல காலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், எகிப்தின் புதிய இராச்சியத்தின் சிதைவுக்குப் பின்னர் நெபாட்டாவில் ஆரம்ப நிலையிலேயே மையப்படுத்தப்பட்டது.

மரபார்ந்த பண்டைக்காலத்தில் நுபியன்களின் தலைநகரம் மெரோயில் அமைந்திருந்தது. ஆரம்பகால கிரேக்க புவியியல்களில், மெரோடிக் இராச்சியம் எத்தியோப்பியா என அறியப்பட்டது. குஷ் நாகரிகமானது முதலில் உலகில் இரும்பு தொழிநுட்பத்தை பயன்படுத்தியது. மெரோயில் உருவாக்கப்பட்ட நுபியன் இராச்சியமானது கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. குசைட் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதிகமான இராச்சியங்கள் அதன் பழைய இடங்களில் தோண்றின. நுபியா இவற்றில் ஒன்றாகும்.

புவியியல்

Jebel Barkal நுபியாவில் அமைந்துள்ள மலை, யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தளம்

சூடானானது வட அபிரிக்காவில் 853கிமீ(530மைல்)நீளமான செங்கடல் கரையோர எல்லையில் அமைந்துள்ளது. இது 1,886,068கிமீ2(728,215 சதுரமைல்) பரப்பளவை உடையது. ஆபிரிக்கக் கண்டத்தில் மூன்றாவது பெரிய நாடாகவும், உலகில் பதினாறாவது பெரிய நாடாகவும் காணப்படுகின்றது. சூடான், மற்றும் 23°N ரேகையில் அமைந்துள்ளது.

சூடானின் நிலப்பரப்பு பொதுவாக தட்டையான சமவெளியாகக் காணப்படுகின்றதுடன், பல மலைத்தொடர்கள் மூலம் உடைக்கப்பட்டுள்ளது. மேற்குப் பகுதியில்,மர்ரகா மலைகளில் அமையப்பெற்றுள்ள டெரிபா கல்டேரா(3,042மீற்றர் or 9,980 அடி), சூடானின் மிக உயரத்தில் உள்ள முனையாகக் காணப்படுகின்றது.

நைல் நதியின், நீளம் மற்றும் வெள்ளை நைல் ஆறுகள் கார்த்தூம் நகரில் சந்திக்கின்றதுடன், வடக்கு நோக்கி எகிப்தின் ஊடாக மத்தியதரை கடலுக்கு பாய்கின்றது. சூடான் ஊடாக நீள நைல்நதியின் ஏறத்தாள 800கிமீ(497மைல்) செல்கின்றதுடன், சென்னர் மற்றும் கார்த்தூம் இடையில் டின்டர், ரகாத் ஆறுகளுடன் இணைகின்றது. சூடான் ஊடாகச்செல்லும் வெள்ளை நைல் நதிக்கு துணை ஆறுகள் காணப்படுவதில்லை.

காலநிலை

நாட்டின் தெற்கில் செல்லச் செல்ல மழை அளவு அதிகரிக்கிறது. மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் வடகிழக்கு ந்யூபன் பாலைவனம் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள பாயுடா பாலைவனம் போன்ற மிகவும் வறண்ட பாலைவகைப் பகுதிகள் உள்ளன;   தெற்கில் சதுப்பு நிலங்களும் மழைக்காடுகளும் உள்ளன. சூடானின் மழைக்காலமானது வடக்கே சுமார் மூன்று மாதங்கள் (ஜூலை முதல் செப்டம்பர் வரை), தெற்கில் ஆறு மாதங்கள் (ஜூன் முதல் நவம்பர் வரை) வரை உள்ளது.

வறண்ட பகுதிகள் புழுதிப் புயலால் பாதிக்கப்படுகின்றன, இவை ஹபூப் என அழைக்கப்படுகின்றன, இது முற்றிலும் சூரிய ஒளியைத் தடுக்கும் விதத்தில் இருக்கும்.   வடக்கு மற்றும் மேற்குப் பகுதி அரை பாலைவனப் பகுதிகளில், மக்கள் அடிப்படை வேளாண்மைக்கு மழைப்பொழிவை நம்பி இருக்கின்றார்கள்.   அநேகர் நாடோடிகளாக, செம்றி ஆடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து பயணம் செய்கிறார்கள். நைல் நதிக்கு அருகில் உள்ள நிலப்பகுதிகளில், பணப் பயிர்கள் செய்யப்படுகின்றன. [12]

உணவு

அசீடா என்னும் கோதுமை ரொட்டி, கிச்ரா என்னும் சோள மாவு ரொட்டி, குராசா என்னும் மைதா மாவு ரொட்டியும் அங்கே அடிப்படை உணவு.[13]

மக்கள் தொகை

கர்த்தூம்-இல் ஒரு மாணவர்

சூடானின் 2018 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், சூடானின் வடக்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளில் கணிக்கப்பட்ட மக்கள் தொகை 30 மில்லியனிற்கு மேற்பட்டதாக காணப்படுகின்றது.[14] இது தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்த பின் எஞ்சிய பகுதிகளின் நடப்பு மக்கள் தொகை 30 மில்லியனிற்கு மேற்பட்டதாக காணப்படுகின்றது என்பதை காட்டுகின்றது. 1983 இன் சூடான் மக்கள் தொகை கணக்கெடுப்பையும், தற்போதைய சூடானின் மக்கள் தொகையையும் ஒப்பிடுகையில், கடந்த இரண்டு தசாப்தங்களில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். இது கிட்டதட்ட 21.6 மில்லியன் அதிகரித்துள்ளது. [15] கிரேட்டர் கார்ட்டூமின் (கர்த்தூம், ஒம்டுர்மன், வடக்கு கார்ட்டூம் உள்ளடங்கி) மக்கள் தொகை துரிதமாக வளர்கின்றது. இதன் மக்கள் தொகை 5.2 மில்லியனாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Sudan News - Breaking World Sudan News - The New York Times
  2. "Sudan coup leader steps down". பிபிசி. 12 April 2019. https://www.bbc.com/news/world-africa-47913338. பார்த்த நாள்: 12 April 2019.
  3. "North Sudan launches new currency into economically troubled waters". Al Bawaba. SyndiGate (Amman). 25 July 2011. http://www.albawaba.com/north-sudan-launches-new-currency-economically-troubled-waters-384581. பார்த்த நாள்: 6 January 2012.
  4. "Church Building in North Sudan in Ruins as Hostilities Grow". Santa Ana, California: Compass Direct (23 August 2011). மூல முகவரியிலிருந்து 26 August 2011 அன்று பரணிடப்பட்டது.
  5. Collins, Robert O. (2008). A History of Modern Sudan. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். ISBN 978-0-521-85820-5.
  6. Davison, Roderic H. (1960). "Where is the Middle East?". Foreign Affairs 38 (4): 665–675. doi:10.2307/20029452.
  7. "The World Factbook: Sudan". U.S. Central Intelligence Agency. பார்த்த நாள் 10 July 2011.
  8. http://www.wto.org/english/thewto_e/whatis_e/tif_e/org6_e.htm
  9. http://www.parliament.gov.sd/en/
  10. International Association for the History of Religions (1959), Numen, Leiden: EJ Brill, p. 131, "West Africa may be taken as the country stretching from Senegal in the West, to the Cameroons in the East; sometimes it has been called the central and western Sudan, the Bilad as-Sūdan, 'Land of the Blacks', of the Arabs"
  11. "Sudan A Country Study". Countrystudies.us.
  12. "Sudan – Geography & Environment". Oxfam GB (n.d.). மூல முகவரியிலிருந்து 1 October 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 January 2011.
  13. பா.ராகவன் (21 நவம்பர் 2013). "வண்டிக்கு எண்ணெய் கொடு, வயிற்றுக்கு ரொட்டி கொடு!". பார்த்த நாள் 25 நவம்பர் 2013.
  14. Heavens, Andrew (21 May 2009). "Southerners dismiss Sudan pre-poll census count". Reuters. http://af.reuters.com/article/topNews/idAFJOE54K0CR20090521?sp=true. பார்த்த நாள்: 28 May 2013.
  15. "Sudan – Population". Library of Congress Country Studies.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.