சாதவாகன விரைவுத் தொடர்வண்டி
சாதவாகன விரைவுவண்டி (Satavahana Express) என்பது இந்தியாவின் விஜயவாடா மற்றும் செகந்திராபாத் நகரங்களுக்கு இடையே இயங்கும் தொடருந்து சேவையாகும். இவ்விரு நகரங்களும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ளவை ஆகும். இந்திய ரயில்வேயின், தெற்கு மத்திய ரயில்வேயின் விஜயவாடா பிரிவு இந்தத் தொடருந்து அலுவலக பணிகளை நிர்வகிக்கின்றது.[1] சாதவாகன விரைவுவண்டி சுமார் 351 கிலோ மீட்டர் (218 மைல்) தூரத்தினை 5 மணி மற்றும் 35 நிமிடங்களில் கடக்கிறது. இந்தத் தொடருந்துசேவையின் பயன்பாடு அதிகரித்ததால், மஹபுபாத் மற்றும் மதிரா ஆகிய இடங்கள் நிறுத்தங்களாக இச்சேவையில் இணைக்கப்பட்டன. [2]சாதவாகன விரைவுவண்டி காஸிபெட், வாரங்கல், கேசமுத்திரம், மஹபுபாத் மற்றும் மதிரா இடங்களில் நிறுத்தங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுத்தங்களுக்கு அடுத்தபடியாகத்தான் அதன் இலக்கு நிலையமான விஜயவாடா சந்திப்பினை அடைகிறது.
![]() சாதவாகன விரைவுவண்டி | |||
---|---|---|---|
![]() 12713 (BZA-SC) சாதவாகன விரைவுவண்டி | |||
கண்ணோட்டம் | |||
வகை | அதிவிரைவுவண்டி | ||
நிகழ்வு இயலிடம் | ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா | ||
நடத்துனர்(கள்) | தெற்கு மத்திய ரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | விஜயவாடா சந்திப்பு | ||
முடிவு | செகந்தராபாத் சந்திப்பு | ||
ஓடும் தூரம் | 351 km (218 mi) | ||
சராசரி பயண நேரம் | இருவழிப் பயணத்திற்கான மொத்த நேரம்- 5 மணி, 35 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் | ||
தொடருந்தின் இலக்கம் | 12713 / 12714 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | குளிரூட்டு சாதன இருக்கைவண்டி, இரண்டாம்வகுப்பு இருக்கைவண்டி, உணவுப்பெட்டி, முன்பதிவு வசதியற்ற பெட்டிகள் | ||
இருக்கை வசதி | உள்ளது | ||
படுக்கை வசதி | இல்லை | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
வேகம் | 62.87 km/h (39.07 mph) நிறுத்தங்களுடன் சேர்த்த சராசரி வேகம் | ||
|
இதன் வண்டி எண் 12713, மத்திய தெற்கு ரயில்வேயில் அதிவிரைவில் இயங்கக்கூடியத் தொடருந்துகளில் இதுவும் ஒன்று. இந்தத் தொடருந்து மதிரா மற்றும் கம்மாம் ஆகிய இடங்களுக்கு இடையே மணிக்கு 134 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுபடுகிறது. [3] விஜயவாடாவில் இருந்து அதிகாலையில் புறப்படும் விரைவுவண்டிகளில் சாதவாகன விரைவுவண்டியும் ஒன்று. பினாகினி விரைவுவண்டி, ரட்னாச்சல் விரைவுவண்டி இரண்டும் விஜயவாடாவில் இருந்து அதிகாலையில் புறப்படும் பிற தொடருந்துகளாகும்.
வண்டி எண்கள்
சாதவாகன எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 18 ரயில் பெட்டிகள் உள்ளன. லாலாகுடா பகுதியில் WAP-7 மூலம் சாதவாகன எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படுகிறது. விஜயவாடாவில் இருந்து செகந்திராபாத்திற்கு செல்லும்போது சாதவாகன எக்ஸ்பிரஸ் 12713 என்ற வண்டி எண்ணுடனும், செகந்திரபாத்தில் இருந்து விஜயவாடாவிற்கு செல்லும்போது சாதவாகன எக்ஸ்பிரஸ் 12714 என்ற வண்டி எண்ணுடனும் செயல்படுகிறது.
பெயர் காரணம்
சாதவாகன வம்சத்தினை பெருமைப்படுத்தும் விதமாக இந்த ரயில்சேவைக்கு சாதவாகன எக்ஸ்பிரஸ்[4] என்று பெயர்சூட்டியுள்ளனர். சாதவாகன் வம்சத்தினர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், விதர்பா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய இடங்களின் பகுதிகள் மற்றும் ஆந்திராவினை ஆட்சி செய்தவர்களாவர்.
வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்:
எண் | நிலையத்தின்
பெயர் (குறியீடு) |
வரும்
நேரம் |
புறப்படும்
நேரம் |
நிற்கும்
நேரம் (நிமிடங்கள்) |
கடந்த
தொலைவு (கி.மீ) |
நாள் | பாதை |
---|---|---|---|---|---|---|---|
1 | விஜயவாடா
சந்திப்பு (BZA) |
தொடக்கம் | 06:10 | 0 | 0 கி.மீ | 1 | 1 |
2 | மதிரா
(MDR) |
06:57 | 06:58 | 1 நிமி | 57 கி.மீ | 1 | 1 |
3 | கம்மம்
(கி.மீT) |
07:18 | 07:20 | 2 நிமி | 102 கி.மீ | 1 | 1 |
4 | டோர்னக்கல்
சந்திப்பு (DKJ) |
07:49 | 07:50 | 1 நிமி | 125 கி.மீ | 1 | 1 |
5 | மஹபூபாபாத்
(MABD) |
08:09 | 08:10 | 1 நிமி | 149 கி.மீ | 1 | 1 |
6 | கேசமுத்திரம்
(KDM) |
08:29 | 08:30 | 1 நிமி | 164 கி.மீ | 1 | 1 |
7 | வரங்கல்
(WL) |
09:00 | 09:02 | 2 நிமி | 209 கி.மீ | 1 | 1 |
8 | காஸிபேட்டை
சந்திப்பு (KZJ) |
09:20 | 09:22 | 2 நிமி | 219 கி.மீ | 1 | 1 |
9 | செகந்திராபாத்
சந்திப்பு (SC) |
11:45 | முடிவு | 0 | 351 கி.மீ | 1 | 1 |
விஜயவாடா சந்திப்பில் இருந்து இந்திய ரயில்வே நேரப்படி 6.10 க்கு புறப்படும் சாதவாகன எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் சந்திப்பினை 11.45 மணியளவில் சென்றடைகிறது. திரும்பி புறப்படும்போது செகந்திராபாத் சந்திப்பில் இருந்து 16.15 க்கு புறப்பட்டு விஜயவாடா சந்திப்பினை 21.50 மணியளவில் வந்தடைகிறது. செகந்திராபாத் சந்திப்பினை அடையும் போது சராசரியாக 25 நிமிடங்கள் காலதாமத்தினையும், செகந்திராபாத் சந்திப்பினை அடையும்போது சராசரியாக 20 நிமிடங்கள் காலதாமத்தினையும் சாதவாகன எக்ஸ்பிரஸ் கொண்டுள்ளது. [5]
ரயில் பெட்டிகள்
12714 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் சாதவாகன எக்ஸ்பிரஸ் பின்வரும் முறைப்படி ரயில் பெட்டிகளைக் கொண்டுள்ளது. L - SLR - UR - UR - UR - C1 - D1 - D2 - D3 - D4 - D5 - PC - UR - UR - UR - UR - UR – SLR
அதேபோல் 12713 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் சாதவாகன் எக்ஸ்பிரஸ் பின்வரும் முறைப்படி ரயில்பெட்டிகளைக் கொண்டுள்ளது. [2]
L - SLR - UR - UR - UR - UR - UR - PC - D1 - D2 - D3 - D4 - D5 - C1 - UR - UR - UR – SLR
ரயில் வேகம்
12713 வண்டி எண்ணுடன் செயல்படும் சாதவாகன எக்ஸ்பிரஸ் சராசரியாக மணிக்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில், 350 கிலோ மீட்டர் தூரத்தினை 5 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களில் கடக்கிறது. 12714 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் சாதவாகன எக்ஸ்பிரஸ் இதேயளவு வேகத்துடன் செயல்படுகிறது. இரு செயல்பாடுகளிலும் ஏழு நிறுத்தங்கள் உள்ளன. உணவு வசதி மற்றும் சரக்குப் பொருட்கள் வைக்கும் அறை வசதி போன்றவை இரு ரயில்சேவைகளிலும் வழங்கப்படுகின்றன.
குறிப்புகள்
- "12714/Satavahana SF Express". indiarailinfo.com.
- "Satavahana Express (12714) Running Train Status". Running Status.
- "Satavahana Express". Cleartrip.
- "Satavahana Express (12713) Current Running Status". etrains.in.
- "Train Schedule of SATAVAHANA EXP (12714)". etrains.info.