க. நெடுஞ்செழியன்
க. நெடுஞ்செழியன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர்[1]. “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” போன்ற 18 நூல்களை எழுதியுள்ளார்[2]. இவர் எழுதிய “தமிழரின் அடையாளங்கள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
க. நெடுஞ்செழியன் | |
---|---|
![]() | |
பிறப்பு | சூன் 15, 1944 [1] |
தேசியம் | இந்தியா |
பணி | பேராசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் |
நூல்கள்
இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும் 1989
தமிழர் தருக்கவியல்
தமிழரின் அடையாளங்கள்
சங்ககாலத் தமிழர் சமயம்
தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்
ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம்
தமிழர் இயங்கியல் (தொல்காப்பியமும் சரக சம்கிதையும்) 2000
உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்
சமூக நீதி
சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும் 2007
மரப்பாச்சி 2010
தொல்காப்பியம் திருக்குறள் காலமும் கருத்தும் 2010
சித்தண்ணவாயில்
ஆசிவகமும் ஐயனார் வரலாறும் 2014
(தரவு - திருவாரூர் த.ரெ. தமிழ்மணி)
பொய் வழக்கு
கர்நாடக அரசு இவர் மீது போட்ட பொய் வழக்கிலிருந்து (முப்பத்திரெண்டு மாத சிறைவாசம், பத்தாண்டு கால நீதி மன்ற அலைச்சல், ஆய்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபடா வண்ணம் ஏற்படுத்தப்பட்ட மன உளைச்சல் அடைந்த பிறகு) 30.5.2013 அன்று நீதி மன்றத்தின் மூலம் விடுதலைப் பெற்றார்[3].
மேற்கோள்கள்
- பூங்குழலி (1 மே 2010). ""தமிழ் உலகமே அயோத்திதாசருக்கும் அவர் குடும்பத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது". கீற்று. பார்த்த நாள் 29 மே 2016.
- கே.கே. மகேஷ் (16 திசம்பர் 2017). "அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்". தி இந்து. http://tamil.thehindu.com/general/literature/article21820117.ece. பார்த்த நாள்: 16 திசம்பர் 2017.
- நா. இராசா ரகுநாதன் (21 ஆகசுடு 2013). "இந்த வழக்கு ஒரு செத்த குதிரை". கீற்று. பார்த்த நாள் 29 மே 2016.