கொலம்பியா

கொலம்பியா அல்லது கொலொம்பியக் குடியரசு (República de Colombia) என்றழைக்கப்படுவது தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் நடு அமெரிக்காவிலுள்ள ஒரு நாடாகும். வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கரிபியன் கடலும் கிழக்கில் வெனிசுவேலாவும் பிரேசிலும், தெற்கில் எக்குவடோர், மற்றும் பெருவும், மேற்கில் பனாமாவும் பசிபிக் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.[2] தனது கடல் எல்லைகளை கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஒண்டுராசு, ஜமேக்கா, டொமினிக்கன் குடியரசு, மற்றும் எயிட்டியுடன் பகிர்ந்து கொள்கின்றது.[3] இது ஒற்றையாட்சி, அரசியலமைப்பைச் சார்ந்த குடியரசாகும் ;முப்பத்திரண்டு மாவட்டங்கள் உள்ளன. தற்போது கொலம்பியா உள்ள பகுதியில் துவக்கத்தில் முயிசுக்கா, குயிம்பயா, தயிரோனா தொல்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர்.

கொலம்பியா குடியரசு
República de Colombia
ரெபூப்லிக்காய் கொலம்பியா
கொடி சின்னம்
குறிக்கோள்: "Libertad y Orden"  (எசுப்பானியம்)
"விடுதலையும் நீதியும்"
நாட்டுப்பண்: "Oh, Gloria Inmarcesible!"  (எசுப்பானியம்)
Location of கொலம்பியாவின்
தலைநகரம்பொகொட்டா
4°39′N 74°3′W
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
மக்கள் கொலொம்பியர்
அரசாங்கம் தலைவர் இருக்கும் குடியரசு
   குடியரசுத் தலைவர் ஆல்வரோ உரீபே
   துணைத் தலைவர் ஃபிரான்சிஸ்கோ சான்ட்டோஸ்
   காங்கிரெஸ் தலைவர் நான்சி கூட்டியெரெஸ்
   உயர்நீதிமன்றத்தின் தலைவர் சேசார் வலென்சியா
விடுதலை ஸ்பெயின் இடம் இருந்து
   கூற்றம் ஜூலை 20 1810 
   திட்டப்படும் ஆகஸ்ட் 7 1819 
பரப்பு
   மொத்தம் 11,41,748 கிமீ2 (26வது)
4,40,839 சதுர மைல்
   நீர் (%) 8.8
மக்கள் தொகை
   ஏப்ரல் 2008 கணக்கெடுப்பு 44,087,000 (29வது)
   2005 கணக்கெடுப்பு 42,888,592
   அடர்த்தி 40/km2 (161வது)
104/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $690.847  பில்லியன் [1] (29வது)
   தலைவிகிதம் $7,565 (81வது)
ஜினி (2006)52
உயர்
மமேசு (2007) 0.791
Error: Invalid HDI value · 75வது
நாணயம் கொலொம்பிய பேசோ (COP)
நேர வலயம் (ஒ.அ.நே-5)
அழைப்புக்குறி 57
இணையக் குறி .co

1499இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபிறகு முயிசுக்கா நாகரிகத்தை கைப்பற்றி தங்கள் குடியேற்றப்பக்குதிகளை உருவாக்கினர். பொகோட்டாவைத் தலைநகராகக் கொண்டு புதிய கிரெனடா அரச சார்புநாடு ஏற்படுத்தப்பட்டது. எசுப்பானியாவிடமிருந்து 1819இல் விடுதலை பெற்றபோதும் 1830இல் "கிரான் கொலம்பியா" கூட்டரசு கலைக்கப்பட்டது. தற்போது கொலம்பியாவும் பனாமாவும் உள்ள பகுதி புதிய கிரெனடா குடியரசாக உருவானது. புதிய நாடு கிரெனடியக் கூட்டரசு என 1858இலும் கொலம்பிய ஐக்கிய நாடுகள் என 1863இலும் சோதனைகள் நடத்தியபிறகு1866இல் இறுதியாக கொலம்பியக் குடியரசானது. 1903இல் கொலம்பியாவிலிருந்து பனாமா பிரிந்தது. 1960களிலிருந்து சமச்சீரற்ற தீவிரம் குறைந்த ஆயுதப் போராட்டத்தை எதிர்கொண்டு வந்தது; இது 1990களில் தீவிரமடைந்தது. இருப்பினும் 2005 முதல் இது குறைந்து வருகின்றது.[4] கொலம்பியாவில் பல்லின மக்களும் பன்மொழியினரும் மிகுந்துள்ளதால் உலகின் பண்பாட்டு மரபுவளமிக்க மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கொலம்பியாவின் பன்முக நிலவியலும் நிலத்தோற்றமும் வலுவான வட்டார அடையாளங்களைத் தோற்றுவித்துள்ளன. நாட்டின் பெரும்பாலான நகரிய மையங்கள் அந்தீசு மலைத்தொடரின் மேட்டுப்பகுதிகளில் அமைந்துள்ளன.

தவிரவும் கொலம்பியாவின் நிலப்பகுதிகள் அமேசான் மழைக்காடு, அயனமண்டலப்புல்வெளி, கரிபிய மற்றும் அமைதிப் பெருங்கடல் கடலோரப் பகுதிகளை அடக்கியுள்ளன. சூழ்நிலையியல்படி, இது உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது; சதுர கிலோமீட்டருக்கு மிகவும் அடர்த்தியான பல்வகைமையை உடைய நாடாகவும் விளங்குகின்றது. [5] இலத்தீன் அமெரிக்காவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் கொலம்பியா வட்டார செல்வாக்கும் மத்தியதர செல்வாக்குமுள்ள நாடாகவும் உள்ளது.[1] சிவெட்சு (CIVETS) எனக் குறிப்பிடப்படும் ஆறு முன்னணி வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் அணுக்கம் பெற்ற உறுப்பினர் நாடாகவும் உள்ளது.[6] கொலம்பியா பேரியப் பொருளியல் நிலைத்தன்மையும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளையும் உடைய பன்முகப்பட்ட பொருளியலைக் கொண்டுள்ளது.[7][8]

மேற்சான்றுகள்

  1. "World Economic Outlook Database: Colombia". International Monetary Fund (ஏப்ரல் 2016). பார்த்த நாள் 17 May 2016.
  2. "The Republic of Colombia shares land borders with five (5) countries". cancilleria.gov.co.
  3. "Maritime borders". cancilleria.gov.co.
  4. Historical Memory Group (2013). ""Enough Already!" Colombia: Memories of War and Dignity." (Spanish). The National Center for Historical Memory’s (NCHM).
  5. Luis Fernando Potes. "Colombia is the second most biodiverse country in the world" (Spanish). prodiversitas.bioetica.org. மூல முகவரியிலிருந்து 29 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 March 2014.
  6. Steve Slater (27 ஏப்ரல் 2010). "After BRICs, look to CIVETS for growth – HSBC CEO". Reuters. http://www.reuters.com/article/2010/04/27/hsbc-emergingmarkets-idUSLDE63Q26Q20100427.
  7. "Colombian economy" (spanish). banrepcultural.org. பார்த்த நாள் 16 ஏப்ரல் 2013.
  8. "Colombia: Concluding Statement of the 2015 Article IV Mission". imf.org. பார்த்த நாள் 5 November 2015.

வெளியிணைப்புகள்

பொதுத் தகவல்
அரசு
பண்பாடு
புவியியல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.