கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத்
கிரிஸ்னேஸ்வரர் கோயில் அல்லது குஷ்மேஸ்வரர் கோயில் (Grishneshwar) எனப்படும் கோயில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், எல்லோராவிலிருந்து ஒரு கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ள இக்கோயில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனிச் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையையும் சிற்ப செதுக்கல்களையும் கொண்ட இக்கோயில் மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து ஜோதிலிங்க தலங்களில் ஒன்றாகும்.
கிரிஸ்னேஸ்வரர் கோயில் | |
---|---|
![]() | |
![]() ![]() கிரிஸ்னேஸ்வரர் கோயில் Location in மகாராஷ்டிரா[1] | |
ஆள்கூறுகள்: | 19°37′14″N 75°14′25″E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராஷ்டிரா |
மாவட்டம்: | அவுரங்காபாத், மகாராட்டிரம் |
அமைவு: | எல்லோரா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவன் |













இக்கோயில், சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் இங்கே திருத்த வேலைகளைச் செய்வித்தார். வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலையும், காயாவில் உள்ள விஷ்ணு பாத கோயிலையும் திரும்பக் கட்டுவித்தவரும் இவரே ஆவார். [2][3]
படக்காட்சியகம்
- கிரிஸ்னேஸ்வரர் கோயில்
- கிரிஸ்னேஸ்வரர் கோயில்
- கிரிஸ்னேஸ்வரர் கோயில்
- கிரிஸ்னேஸ்வரர் கோயில்