கமல் (இயக்குனர்)
கமல் ஒரு மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் கமாலுதீன் மொகம்மது மஜீத் (Kamaluddin Mohammed Majeed, பிறப்பு: நவம்பர் 28, 1957) ஆகும். இவர் கமல் எனும் பெயராலேயே பரவலாக அறியப்படுகிறார். இவர் கேரளாவின் திருச்சூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் முதலில் த்ராசம் எனும் திரைப்படத்தில் இணை இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றினார்.[1][2] 1986 ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படமான மிழிநீர்ப் பூக்கள் (Mizhineer Pookkal) என்பதை இயக்கினார். இவரது திரைப்படங்களில் பெரும்பாலும் இந்துஸ்தானி மற்றும் கஜஸ் இசை பயன்படுத்தப்பட்டிருக்கும்.[3] இவர் கருத்த பஷிகள், பெருமழக்காலம் மற்றும் செல்லுலாய்ட் ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். தமிழில் பிரியாத வரம் வேண்டும் எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
கமல் | |
---|---|
பிறப்பு | கமாலுதீன் மொகம்மது மஜீத் 28 நவம்பர் 1957 திருச்சூர், கேரளா |
பணி | இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1981 முதல் |
வாழ்க்கைத் துணை | சபுராபி |
பிள்ளைகள் | ஜனுஸ், ஹன்னா |
மேற்கோள்கள்
- "Thraasam (1981)". malayalachalachithram.com (2007-05-12). பார்த்த நாள் 2013-02-18.
- http://www.imdb.com/name/nm0436382/bio
- http://www.mathrubhumi.com/movies/interview/382161/
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.