ஒண்டுராசு

ஒண்டுராசு (Honduras, (/hɒnˈdʊərəs/ (listen); எசுப்பானியம்: [onˈduɾas]), அதிகாரபூர்வமாக ஒண்டுராசு குடியரசு (Republic of Honduras), என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது சில வேளைகளில் பிரித்தானிய ஒண்டுராசிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக எசுப்பானிய ஒண்டுராசு எனவும் அழைக்கப்பட்டது[5] இதன் எல்லைகளாக மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சால்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே ஒண்டுராசு வளைகுடாவில் கரிபியக் கடல் ஆகியன அமைந்துள்ளன.

ஒண்டுராசு
Republic of Honduras

República de Honduras
கொடி சின்னம்
குறிக்கோள்: 
  • "Libre, Soberana e Independiente" (எசுப்பானிய மொழி)
  • "விடுதலை, உரிமை, சுதந்திரம்"
நாட்டுப்பண்: "ஒண்டுராசின் நாட்டுப்பண்"
Location of ஒண்டுராசின்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டெகுசிகல்பா
14°6′N 87°13′W
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
இனக் குழு ([1])
மக்கள்
  • ஒண்டூரான்
  • கத்திராச்சோ
அரசாங்கம் அரசுத்தலைவர் முறை
   அரசுத்தலைவர் குவான் ஒர்லாந்தோ எர்னான்டெசு
   தேசிய காங்கிரசு தலைவர் மவுரீசியோ ஒலிவா
சட்டமன்றம் தேசிய காங்கிரசு
விடுதலை
   எசுப்பானியாவிடம்
இருந்து அறிவிப்புb
15 செப்டம்பர் 1821 
   1வது மெக்சிக்கோ பேரரசிடம்
இருந்து விடுதலை அறிவிப்பு
1 சூலை 1823 
   ஒண்டுராசாக அறிவிப்பு
(நடு அமெரிக்க கூட்டுக் குடியரசிடம் இருந்து)
5 நவம்பர் 1838 
பரப்பு
   மொத்தம் 112 கிமீ2 (102-ஆம்)
43 சதுர மைல்
மக்கள் தொகை
   2010 கணக்கெடுப்பு 8,249,574 (94-ஆம்)
   2007 கணக்கெடுப்பு 7,529,403
   அடர்த்தி 64/km2 (128-ஆம்)
166/sq mi
மொ.உ.உ (கொஆச) 2014 கணக்கெடுப்பு
   மொத்தம் $40.983 பில்.[2]
   தலைவிகிதம் $4,959[2]
மொ.உ.உ (பெயரளவு) 2014 கணக்கெடுப்பு
   மொத்தம் $19.567 பில்.[2]
   தலைவிகிதம் $2,368[2]
ஜினி (1992–2007)55.3[3]
உயர்
மமேசு (2014) 0.606[4]
மத்திமம் · 131st
நாணயம் லெம்பிரா (HNL)
நேர வலயம் நநேவ (ஒ.அ.நே−6)
வாகனம் செலுத்தல் வலது
அழைப்புக்குறி +504
இணையக் குறி .hn
a. ஐரோப்பிய, அமெரிக்க இந்தியக் கலப்பு
b. நடு அமெரிக்கக் கூட்டுக் குடியரசின் பகுதியாக

ஒண்டுராசு பதினாறாம் நூற்றாண்டில் எசுப்பானியரின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறிப்பாக மாயா போன்ற பல முக்கிய இடையமெரிக்கப் பண்பாடுகளைக் கொண்டிருந்த நாடாகும். எசுப்பானியர்கள் இங்கு உரோமைக் கத்தோலிக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, இது பெரும்பான்மையாக எசுப்பானிய மொழி பேசும் நாடாக உள்ளது. அத்துடன் பழங்குடியினரின் கலாசாரங்களுடன் கலந்த பல பண்பாடுகள் வழக்கிலுள்ளன. ஒண்டுராசு 1821 இல் விடுதலை பெற்று, குடியரசான போதிலும், மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒண்டுராசு உலகின் மிக அதிகமான மனிதக்கொலைகள் நடக்கும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது.[6]

ஒண்டுராசு 112,492 கிமீ2 பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை 8 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இங்கு கனிமம், காப்பி, வெப்பமண்டலப் பழவகைகள், கரும்பு உட்படப் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இங்கு துணித் தொழிற்சாலைகள் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

ஹொண்டுராஸ் வரைபடம்

மேற்கோள்கள்

  1. "Honduras". த வேர்ல்டு ஃபக்ட்புக் (5 சனவரி 2016). பார்த்த நாள் 2016-02-09.
  2. "Honduras". அனைத்துலக நாணய நிதியம். பார்த்த நாள் 18 October 2014.
  3. 1992–2007: "Human Development Report 2009 – M Economy and inequality – Gini index". Human Development Report Office, United Nations Development Programme. மூல முகவரியிலிருந்து 17 October 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 October 2009.
  4. "Human Development Report 2015". ஐக்கிய நாடுகள் அவை (2015). பார்த்த நாள் 15 December 2015.
  5. "Archeological Investigations in the Bay Islands, Spanish Honduras". Aboututila.com. பார்த்த நாள் 27 சூன் 2010.
  6. Parkinson, Charles (21 ஏப்ரல் 2014). "Latin America is World's Most Violent Region: UN". InSight Crime. பார்த்த நாள் 2016-02-09.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.