ஐக்கிய அமெரிக்காவும் பேரழிவு ஆயுதங்களும்
ஐக்கிய அமெரிக்கா பேரழிவு ஆயதங்களின் வகைகளான அணு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள் மற்றும் உயிரியல் ஆயுதங்கள் ஆகியவற்றை வைத்துள்ளதாக அறியப்படுகிறது. அணு ஆயுதத்தை போரில் பயன்படுத்திய ஒரே நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். மேலும் ஐக்கிய அமெரிக்கா இரசாயன ஆயதங்களை முதல் உலகப் போரில் பயன்படுத்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்கா இரகசியமாக 1940 களில் மன்ஹாட்டன் திட்டம் என்ற பெயரில் அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளது.[1] ஐக்கிய அமெரிக்கா அணுக்கரு இணைவு மற்றும் அணுக்கரு பிளவு ஆகிய இருவகையான அணு குண்டுகளைத் தயாரிப்பதிலும் முன்னோடியாக உள்ளது. அமெரிக்காவே உலகில் மிக அதிகமான அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளது. அதாவது ரஷ்யாவை விட 300 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளது.[2]
ஐக்கிய அமெரிக்கா | |
---|---|
![]() ஐக்கிய அமெரிக்கா இட அமைவு | |
அணுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தேதி | 21 அக்டோபர் 1939 |
முதல் அணு ஆயுத சோதனை | 16 ஜூலை 1945 |
முதல் அணு இணைவு ஆயுத சோதனை | 1 நவம்பர் 1952 |
கடைசி அணு ஆயுத சோதனை | 23 செப்டம்பர் 1992 |
மிக அதிகமான வெடியாற்றல் சோதனை | 15 Mt (1 March 1954) |
மொத்த சோதனைகள் | 1,054 detonations |
உச்ச கையிருப்பு | 32,225 warheads (1966) |
தற்போதைய கையிருப்பு | 5,113 total |
அதிகபட்ச ஏவுகணை தூரம் | 13,000 km (8,078 mi) (நிலத்தில்) 12,000 km (7,456 mi) (நீரில்) |
அணு ஆயதப் பரவல் தடை ஒப்பந்தம் கையெழுத்திட்டமை | ஆம் (1968, one of five recognized powers) |
மேற்கோள்கள்
- The world's nuclear stockpile. 7 April 2010.
- "U.S. has 'nuclear superiority' over Russia". RIA Novosti. 2011-10-25. http://en.rian.ru/world/20111025/168112458.html.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.