எம். சரவணன் (திரைப்படத் தயாரிப்பாளர்)
ஏ. வி. எம் சரவணன் என்றழைக்கப்படும் எம். சரவணன் (M. Saravanan; பிறப்பு 1940) ஒரு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளராவார்.[1][2][3] இவரது தந்தையான ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட ஏ.வி.எம். திரைப்பட நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த சரவணன் பள்ளி இறுதி வகுப்புவரை படித்துள்ளார்.
வகித்த பொறுப்புகள்
இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். [4],
குறிப்புகள்
- AVM Productions to split
- For the family, from AVM
- Finger on people's pulse
- தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்72
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.