இரங்கநாதானந்தர்

சுவாமி இரங்கநாதானந்தர் (டிசம்பர் 15, 1908 – ஏப்ரல் 25, 2005) இராமகிருஷ்ண மடத்தின் துறவி. ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் 13 வது தலைவராகப் பொறுப்பிலிருந்தவர்.

சுவாமி இரங்கநாதானந்தர்
பிறப்புடிசம்பர் 15, 1908
திருச்சூர், கேரளா, இந்தியா
இறப்புஏப்ரல் 25, 2005
பேலூர் மடம், (கல்கத்தா அருகில்),  இந்தியா
இயற்பெயர்சங்கரன் குட்டி
குருசுவாமி சிவானந்தா
தத்துவம்வேதாந்தம்

1926 ஆம் ஆண்டு பிரம்மச்சாரியாக, மைசூர் கிளை ராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தார்.

இந்திய பிரிவினை சமயம் கராச்சி ராமகிருஷ்ண மடத்தில் தலைவராகப் பணியாற்றினார். கராச்சியில் இவரது சொற்பொழிவுகளை எல்.கே.அத்வானி முதலானோர் கேட்டுள்ளனர். பின் அம்மையம் மூடப்பட, இந்தியா திரும்பினார்.[1]

நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது மற்றும் காந்தி அமைதிப் பரிசு ஆகியவற்றை இராமகிருஷ்ண இயக்கத்திற்காகப் பெற்றுக்கொண்ட சுவாமி இரங்கநாதானந்தர், இவரது சேவைக்காக இந்திய அரசு 2000 வருடம் பத்ம விபூஷண் விருது வழங்க முயன்றபோது தனிமனிதரை அடையாளப்படுத்துவதாகக் கூறி பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

நினைவு தபால் தலை

சுவாமி இரங்கநாதானந்தர் மஹராஜ் தபால்தலை

2008 ஆம் ஆண்டில் இந்திய அரசின் தபால்துறை இவரது நினைவாகத் தபால் தலை வெளியிட்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.