ஆ. கார்மேகக் கோனார்

கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவாளர். எழுத்தாளர்.

ஆ. கார்மேகக் கோனார்
பிறப்புதிசம்பர் 27, 1889(1889-12-27)
அகத்தாரிருப்பு, இராமநாதபுரம்
இறப்புஅக்டோபர் 22, 1957(1957-10-22) (அகவை 67)
அறியப்படுவதுதமிழறிஞர், பேராசிரியர்

பிறப்பு

கார்மேகக் கோனார் 1889ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

பணி

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி 1951ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.[1] அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்:

  • பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என். சங்கரய்யா
  • தமிழ்நாடு பொதுநூலகத் துறை இயக்குநர் வே. தில்லைநாயகம்
  • நிலச்சீர்திருத்தப் போராளி கிருட்டிணம்மாள் செகநாதன்
  • அரசுச் செயலர் கி. லட்சுமிகாந்தன் பாரதி

இவர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார்.

விருது

இவருக்கு மதுரையில் 1955ஆம் ஆண்டு சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் செந்நாப்புலவர் என்னும் பட்டத்தை பி. டி. இராசன் வழங்கினார்.[2]

ஆக்கங்கள்

இவர் பின்வரும் நூல்களை இயற்றி இருக்கிறார்:

  1. அறிவு நூல் திரட்டு (2 தொகுதிகள் - உரைநூல்)
  2. ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்)
  3. இதிகாசக் கதாவாசகம் (2 தொகுதிகள்)
  4. ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்
  5. ஒட்டக்கூத்தர்
  6. கண்ணகி தேவி
  7. காப்பியக் கதைகள்
  8. கார்மேகக் கோனார் கட்டுரைகள்
  9. கார்மேகக் கோனார் கவிதைகள்
  10. செந்தமிழ் இலக்கியத்திரட்டு I
  11. பாலபோத இலக்கணம்
  12. மதுரைக் காஞ்சி
  13. மலைபடுகடாம் ஆராய்ச்சி
  14. மூவருலா ஆராய்ச்சி
  15. தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை)
  16. தமிழ்மொழியின் மறுமலர்ச்சி
  17. நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்)

மறைவு

கார்மேகர் 22-10-1957ஆம் நாள் மதுரையில் மறைந்தார்.[3]

சான்றடைவு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.