ஆலியா

ஆலியா தானா ஒட்டன் (Aaliyah Dana Haughton) ஒரு அமெரிக்கப் பாடகரும், நடிகையும், மாடலும் ஆவார். நியூயார்க்கில் உள்ள புரூக்லினில் பிறந்த இவர், மிச்சிக்கனில் உள்ள டெட்ரோயிட்டில் வளர்ந்தார். தனது பத்தாவது வயதில் "இசுட்டார் சேர்ச்" (Star Search) என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "கிளாடீசு நைட்" என்பவருடன் கலந்துகொண்டார். பன்னிரண்டாவது வயதில் ஆலியா "சிவ் ரெக்கார்ட்சு", அலியாவின் உறவினரான பாரி அங்கர்சனின் "பாக்கிரவுன்ட் ரெக்கார்ட்சு" ஆகிய இசைத்தட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். அங்கர்சன், ஆலியாவுக்கு ஆர். கெலி என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். கெலி பின்னர் ஆலியாவுக்கு வழிகாட்டியாக இருந்ததுடன், ஆலியாவின் இசைத்தொகுப்புக்களுக்கான பாடலாசிரியராகவும், அவரின் முதல் இசைத்தொகுப்பான "வயது ஒரு எண்ணன்றி வேறெதுவும் அல்ல" (Age Ain't Nothing but a Number) என்பதன் தயாரிப்பாளராகவும் இருந்தார். இந்த இசைத்தொகுப்பு ஐக்கிய அமெரிக்காவில் மூன்று மில்லியன் பிரதிகள் விற்பனையானதுடன், அமெரிக்க இசைத்தட்டுத் தொழிற் கழகத்தின் இரண்டு பிளாட்டினம் சான்றுப் பத்திரத்தையும் பெற்றது. கெலியுடன் சட்டமுறையற்ற மண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ஆலியா "சிவ்" உடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு "அத்லாந்திக் ரெக்கார்ட்சு" என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

ஆலியா
2000 இல் ஆலியா
பிறப்புஆலியா தானா ஓட்டன்
சனவரி 16, 1979(1979-01-16)
புரூக்லின், நியூயார்க்,ஐ.அ.
இறப்புஆகத்து 25, 2001(2001-08-25) (அகவை 22)
மார்ஷ் துறைமுகம், அபாக்கா தீவுகள், பகமாசு
இறப்பிற்கான
காரணம்
விமான விபத்து
கல்லறைபேர்ன்கிளிஃப் மயானம்
ஆர்ட்சுடேல், நியூயார்க், ஐ.அ.
பணி
  • பாடகர்
  • நடிகை
  • மாடல்
  • நடனக் கலைஞர்
சொந்த ஊர்டெட்ரோயிட், மிச்சிகன், ஐ.அ.
துணைவர்டேமன் டாசு
(2000–2001; இறப்பு)
வாழ்க்கைத்
துணை
ஆர். கெலி
(தி. 19941995) «start: (1994)end+1: (1996)»"Marriage: ஆர். கெலி
to ஆலியா
"
Location:
(linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)
உறவினர்கள்ரசாத் ஓட்டன் (அண்ணன்)
பாரி அங்கர்சன் (மாமா)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1991–2001
வெளியீட்டு நிறுவனங்கள்
  • பிளாக்கிரவுன்ட்
  • சிவ்
  • [வத்திலாந்திக் ரெக்கார்ட்சு
இணைந்த செயற்பாடுகள்
  • மிசி எலியட்
  • டிம்பலான்ட்
  • ஆர். கெலி
  • ஜூனியர் மாபியா
  • DMX (rapper)
  • Static Major
இணையதளம்aaliyah.com
கையொப்பம்

ஆலியா "டிம்பலான்ட்", "மிசி எலியட்" ஆகிய இசைத்தட்டுத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து "மில்லியனில் ஒன்று" (One in a Million) என்னும் தனது இரண்டாவது இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதுவும் ஐக்கிய அமெரிக்காவில் மூன்று மில்லியன் பிரதிகளும், உலகம் முழுவதிலும் எட்டு மில்லியன் பிரதிகளும் விற்பனையாகின. 2000 ஆவது ஆண்டில் ஆலியா தனது முதல் படமான "ரோமியோ இறக்க வேண்டும்" (Romeo Must Die) என்பதில் நடித்தார். இப்படத்தில் ஆலியா பாடிய "மீண்டும் முயற்சி செய்" (Try Again) என்னும் பாடல் பெரும் புகழ் பெற்றது. இவரது "ஆலியா" என்னும் பெயரிலான மூன்றாவதும் கடைசியுமான இசைத்தொகுப்பு யூலை 2001 ஆம் ஆண்டில் வெளியானது.

2001 ஆம் ஆண்டு ஆகத்து 25 ஆம் தேதி ஆலியாவும் வேறு எண்மரும், இசை நிகழ்படம் ஒன்றின் படப்பிடிப்புக்குப் பின்னர் பகமாசில் ஏற்பட்ட விமான விபத்து ஒன்றில் இறந்தனர். விமானத்தை ஓட்டியவர் விமானம் ஓட்டுவதற்கான அனுமதிப் பத்திரம் பெறாதவர் என்பதுடன், பரிசோதனைகளின் போது விமானியின் உடலில் "கொக்கேயின்", "ஆல்ககோல்" ஆகியவற்றின் தடயங்கள் காணப்பட்டன. ஆலியாவின் குடும்பம் விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்தது. இது பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துவைக்கப்பட்டது. ஆலியாவின் இறப்புக்குப் பின்னரும் அவருடைய பல இசைத்தொகுப்புக்கள் வெளியாகி வணிக அடிப்படையில் வெற்றி பெற்றன. 24 தொடக்கம் 32 மில்லியன் வரையிலான இவரது இசைத்தொகுப்புப் பிரதிகள் உலகம் முழுவதிலும் விற்பனையாகியுள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. "பில்போர்ட்" சஞ்சிகை இவரை கடந்த 25 ஆண்டு காலத்தில் 10 ஆவது வெற்றிகரமான R&B பெண் கலைஞராகவும், வரலாற்றில் 27 ஆவது வெற்றிகரமான R&B கலைஞர் எனவும் பட்டியலிட்டுள்ளது.

தொடக்க காலம்

ஆலியா தானா ஒட்டன், 1979 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள புரூக்லினில் பிறந்தார்.[1] டயானா, மைக்கேல் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஆலியா இளையவர். ஆலியா ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். அத்துடன் ஒரு பாட்டி வழியாக தாயக அமெரிக்க மரபும் இவருக்கு உண்டு.[2][3] ஈப்ரு மொழி மூலம் கொண்ட இவருடைய பெயர், "மிக உயர்ந்த, உச்சமான, மிகச் சிறந்த" எனப் பொருள்படும்.[4][5] ஆலியா தனது பெயர் குறித்து மிகவும் பெருமை அடைவதாகவும், தனது வாழ்க்கை முழுவதும் பெயருக்கு ஏற்ப வாழ முயல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[4] மிக இளம் வயதிலேயே இவரது தாயார் இவரைக் குரல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பினார்.[1] ஆலியா, திருமணம், தேவாலய நிகழ்வுகள், சமூக சேவை நிகழ்வுகள் ஆகியவற்றில் பாடத் தொடங்கினார்.[6] இவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது, ஆலியாவின் குடும்பத்தினர் மிச்சிகனில் உள்ள டெட்ரோயிட்டுக்கு இடம்பெயர்ந்தனர். இங்கே ஆலியா அவரது அண்ணனான ரசாத்துடன் வளர்ந்தார்.[7][8] இவர் கத்தோலிக்கத் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தபோது "அன்னி" என்னும் மேடை நாடகத்தில் நடித்தார். அன்றிலிருந்து தான் ஒரு பொழுதுபோக்குக் கலைஞராக வேண்டும் என்ற ஆசை ஆலியாவுக்கு ஏற்பட்டது.[9] ஆலியாவின் தந்தை அவரது மச்சான்களில் ஒருவரான பாரி அங்கர்சன் என்பவரின் களஞ்சிய வணிகத்தில் வேலை செய்தார். தாய் வீட்டில் இருந்து பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டார்.[10]

மேற்கோள்கள்

  1. Huey, Steve. "Aaliyah Biography". AllMusic. பார்த்த நாள் November 8, 2008.
  2. Sutherland 2005, p. 1
  3. "Vibe Magazine's Emil Wilbekin: Remembering Aaliyah". CNN. August 27, 2001. Archived from the original on June 16, 2009. https://web.archive.org/web/20090616164855/http://archives.cnn.com/2001/COMMUNITY/08/27/welbekin.cnna/index.html. பார்த்த நாள்: May 6, 2009.
  4. Sutherland 2005, 2–4.
  5. "Meaning of Aaliyah – baby name Aaliyah". allparenting.com.
  6. Sutherland 2005, p. 9
  7. Kenyatta 2002, p. 3
  8. Bogdanov, Vladimir; Woodstra, Chris; Erlewine, Stephen Thomas (2002). All Music Guide to Rock. Hal Leonard Corporation. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87930-653-X.
  9. Farley 2002, pp. 22–23.
  10. Warner, Jennifer (2014). Aaliyah: A Biography. BookCap Study Guides. https://books.google.com/books?id=-H0SBAAAQBAJ&printsec=frontcover&dq=aaliyah+a+biography&hl=en&sa=X&ei=DmkMVNOSHZPkoASb1YHYCw&ved=0CBoQ6AEwAQ#v=onepage&q=aaliyah%20a%20biography&f=false.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.