ஆட்டமிழக்காதவர்

ஆட்டமிழக்காதவர் (Not out) துடுப்பாட்டத்தில் மட்டையாளர் ஒருவர் ஆட்டத்தின் ஒரு பகுதியில் மட்டையாட களம் இறங்கி அந்த ஆட்டப் பகுதியின் முடிவு வரை வீழாமல் மட்டையாடினால் அவரை ஆட்டமிழக்காதவர் எனக் கூறுவர்.

குறிமான முறை

சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் மட்டையாடுபவர்களைக் குறிக்க உடுக்குறி இடப்படுகிறது.உதாரணமாக 10* என்பது 10 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார் எனும் பொருள்படும்.மகேந்திரசிங் தோனி ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்தவர் (73 முறை) எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[1]

இவற்றையும் காண்க

ஓட்ட விகிதம் (துடுப்பாட்டம்)

சான்றுகள்

  1. Stats: MS Dhoni breaks world record for most ODI not outs, 2017-08-31, https://www.sportskeeda.com/cricket/stats-ms-dhoni-breaks-world-record-most-odi-not-outs, பார்த்த நாள்: 2018-06-06
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.