அ. வரதநஞ்சைய பிள்ளை
அ. வரதநஞ்சைய பிள்ளை (செப்டம்பர் 1, 1877 - ஜூலை 11, 1956) அப்பசாமிப் பிள்ளை, வரதாயி என்பார்க்கு மகனாகப் பிறந்தார். தமிழுடன் தெலுங்கையும் வடமொழியையும் நன்கு அறிந்தவர். விரைந்து கவிபாடுவதில் வல்லவர். கரந்தைச் தமிழ்ச் சங்கத்தில் ‘ஆசிரியர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர். கற்றோரால் ‘புலவரேறு’ என்று சிறப்பிக்கப் பெற்றார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் ’தங்கத் தோடா’ பரிசளிக்கப் பெற்றார். தமிழவேள் உமா மகேசுவரனார் இவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இவர் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். அந்நூலை கரந்தைச் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொழுது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினார்.
மேற்கோள்கள்
- "தமிழன்னையை வாழ்த்தும் தமிழரசிக் குறவஞ்சி". தினமணி. பார்த்த நாள் 5 மே 2016.
- "இனிதே இலக்கியம் – 10: முதல் நாவை யசைத்த மொழி – அ.வரத நஞ்சையப்பர்". அகரமுதல. பார்த்த நாள் 5 மே 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.