அ. செ. இப்ராகிம் இராவுத்தர்
அ. செ. இப்ராகிம் இராவுத்தர் (A. S. Ibrahim Rowther) மதுரையைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். கேப்டன் பிரபாகரன், புலன்விசாரணை , உழவன் மகன், தாலாட்டுப் பாடவா உட்பட 28 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.[1] நடிகர் விஜயகாந்த்தின் திரை அறிமுகத்திற்கு முதன்மை காரணமாக இருந்தார். நெருங்கிய நண்பர்களாக இருவரும் திகழ்ந்தனர். பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியதற்காகவும் ஊக்குவித்ததற்காகவும் அறியப்படுகின்றார்.
தமது 63ஆவது அகவையில் உடல்நலக்கேடால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இராவுத்தர் சூலை 22, 2015 அன்று மரணமடைந்தார்.[1][2]
மேற்சான்றுகள்
- "பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் மரணம்". நக்கீரன் (22 சூலை 2015). பார்த்த நாள் 22 சூலை 2015.
- "Tamil film producer Ibrahim Rowther dead". இந்தியன் எக்சுபிரசு (22 சூலை 2015). பார்த்த நாள் 22 சூலை 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.