அயர்லாந்து குடியரசு

அயர்லாந்து குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிஷ்: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரீஷ் கடல் ஆகியன உள்ளன. இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் கோர்க் (Cork) ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சன்த்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிஷ் மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிச் மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்.

அயர்லாந்து குடியரசு
Republic of Ireland

Éire
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Amhrán na bhFiann  
The Soldier's Song
அமைவிடம்: அயர்லாந்து குடியரசு  (கடும் பச்சை)

 on the European continent  (இளம் பச்சை & கடும் சாம்பல்)
 in the ஐரோப்பிய ஒன்றியம்  (இளம் பச்சை)

அமைவிடம்: அயர்லாந்து குடியரசு  (கடும் பச்சை)

 on the European continent  (இளம் பச்சை & கடும் சாம்பல்)
 in the ஐரோப்பிய ஒன்றியம்  (இளம் பச்சை)

தலைநகரம்டப்ளின்
53°20.65′N 6°16.05′W
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஐரிஷ், ஆங்கிலம்
மக்கள் ஐரிஷ்
அரசாங்கம் குடியரசு மற்றும் நாடாளுமன்ற மக்களாட்சி
   ஜனாதிபதி மேரி மாக்கலீஸ்
   பிரதமர் பிரயன் கொவன்
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
   அறிவிப்பு ஏப்ரல் 24, 1916 
   Ratified ஜனவரி 21, 1919 
   அங்கீகாரம் டிசம்பர் 6, 1922 
   அரசியலமைப்பு டிசம்பர் 29, 1937 
பரப்பு
   மொத்தம் 70,273 கிமீ2 (120வது)
27,133 சதுர மைல்
   நீர் (%) 2.00
மக்கள் தொகை
   2007 கணக்கெடுப்பு 4,339,000[1]
   2006 கணக்கெடுப்பு 4,239,848 (121வது)
   அடர்த்தி 60.3/km2 (139வது)
147.6/sq mi
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
   மொத்தம் $177.2 பில்லியன் (49வது)
   தலைவிகிதம் $43,600 (2வது)
மொ.உ.உ (பெயரளவு) 2006 கணக்கெடுப்பு
   மொத்தம் $202.9 பில்லியன் (30வது)
   தலைவிகிதம் $50,150 (5வது)
மமேசு (2005) 0.959
Error: Invalid HDI value · 5வது
நாணயம் யூரோ (€)¹ (EUR)
நேர வலயம் WET (ஒ.அ.நே+0)
   கோடை (ப.சே) IST (WEST) (ஒ.அ.நே+1)
அழைப்புக்குறி 353
இணையக் குறி .ie2
1. 1999க்கு முன்: ஐரிஷ் பவுன்.
2. .eu தளம் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்படுகின்றது.

சமயம்

அயர்லாந்துக் குடியரசில் உள்ள சமயங்கள்
சமயம் விகிதம்
ரோமன் கத்தோலிக்கர்கள்
 
84.2%
சமயம் சாராதவர்கள்
 
6.2%
சீர் திருத்தத் திருச்சபை
 
4.6%
இசுலாமியர்
 
1.1%
ஏனையவர்கள்
 
2.8%
சனத்தொகையின் படி அயர்லாந்துக் குடியரசின் நகரங்கள்


டுப்லின் (Dublin)

லைம்ரிக் (Limerick)

# நகரம் சனத்தொகை # நகரம் சனத்தொகை


கோர்க் (Cork)

கல்வே (Galway)

1டுப்லின் (Dublin)1,110,62711எனிஸ் (Ennis)25,360
2கோர்க் (Cork)198,58212கில்க்கெனி (Kilkenny)24,423
3லைம்ரிக் (Limerick)91,45413ட்ரலீ (Tralee)23,693
4கல்வே (Galway)76,77814கார்லோ (Carlow)23,030
5வாட்டர்ஃபொர்ட் (Waterford)51,51915நியூ பிரிஸ் (Newbridge)21,561
6ட்ரொக்ஹெடா (Drogheda)38,57816நாஸ் (Naas)20,713
7டுண்ட்லக் (Dundalk)37,81617அத்லோன் (Athlone)20,153
8ஸ்வோட்ஸ் (Swords)36,92418போர்ட்லயோஸ் (Portlaoise)20,145
9பிரே (Bray)31,87219முலின்கர் (Mullingar)20,103
10நவன் (Navan)28,55920வெக்ஸ்ஃபோர்ட் (Wexford)20,072

நிர்வாகப் பிரிவுகள்

  1. ஃவிங்கல் (Fingal)
  2. டுப்லின் (Dublin)
  3. டுன் லயோக்கைரெ-ரத்டவுன் (Dún Laoghaire–Rathdown)
  4. தென் டுப்லின் (South Dublin)
  5. விக்லோ (Wicklow)
  6. வெக்ஸ்ஃபோர்ட் (Wexford)
  7. கார்லோ (Carlow)
  8. கில்டேர் (Kildare)
  9. மெத் (Meath)
  10. லூத் (Louth)
  11. மொனாக்கான் (Monaghan)
  12. கவன் (Cavan)
  13. லோங்ஃபோர்ட் (Longford)
  14. வெஸ்ட்மெத் (Westmeath)
  15. ஒஃவ்வலி (Offaly)
  16. லஒசிச் (Laois)
  17. கில்க்கெனி (Kilkenny)
  1. வாட்டர்ஃபோர்ட் நகரம்(Waterford City)
  2. வாட்டர்ஃபோர்ட் (Waterford)
  3. கோர்க் நகரம் (Cork City)
  4. கோர்க் (Cork)
  5. கெர்ரி (Kerry)
  6. லைம்ரிக் (Limerick)
  7. லைம்ரிக் நகரம் (Limerick City)
  8. தென் திப்பெரரி (South Tipperary)
  9. வட திப்பெரரி (North Tipperary)
  10. க்ளரெ (Clare)
  11. கல்வே (Galway)
  12. கல்வே நகரம் (Galway City)
  13. மயோ (Mayo)
  14. ரொஸ்கொமன் (Roscommon)
  15. சில்கொ (Sligo)
  16. லெய்ட்ரிம் (Leitrim)
  17. டன்கல் (Donegal)

புவியியல்

அயர்லாந்தின் பரப்பளவு 70,273 km2 அல்லது 27,133 சதுர மைல்களாக அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அத்திலாந்திக் சமுத்திரம் அமைந்துள்ளது. வடகிழக்குத் திசையில் வடக்குக் கால்வாய் அமைந்துள்ளது. கிழக்குத் திசையில் ஐரிஷ் கடல் அமைந்துள்ளது.

வெளிநாட்டு உறவு

அயர்லாந்து குடியரசின் வெளிநாட்டு உறவுகள் கணிசமாக செல்வாக்குச் செலுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதும் ஐக்கிய இராச்சிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருப்பதுவுமாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.